வெளிநாட்டு ஊழியர் மரணம்: நிறுவனத்துக்கு அபராதம்

பங்ளாதேஷ் ஊழியர் ஒருவரது மரணம் தொடர்பாகக் கட்டுமான நிறுவனம் ஒன்றுக்கு 170,000 வெள்ளி அபராதம் விதிக்கப் பட்டுள்ளது. 2014ஆம் ஆண்டில் அந்த ஊழியர் பணிபுரிந்த கட்டுமானத் தளத்தில் எட்டு இரும்புத் தூண்கள் அவர் மீது விழுந்ததை அடுத்து அவர் மரணம் அடைந்தார். அவர் மீது விழுந்த இரும்புத் தூண்களின் மொத்த எடை ஏறத்தாழ 7,000 கிலோ. சம்பவம் நிகழ்ந்தபோது மாண்ட ஹசான் ஷஹீத்துக்கு 24 வயது.

வேலை பார்க்கும் தனது ஊழியர்களுக்காகப் போதுமான அளவுக்குப் பாதுகாப்புகளை வழங்காமல் வேலையிடப் பாது காப்பு, சுகாதாரச் சட்டத்தை மீறியதை ‌ஷீட்பைல் வைபிரோ இஞ்சினியரிங் நிறுவனம் ஒப்புக்கொண்டது. 2014ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 30ஆம் தேதி காலை மணி 11.30 அளவில் ஹசானும் இன்னோர் ஊழியரும் அவர்களது மேற்பார்வையாளரும் கிராஞ்சி வட்டாரத்தில் உள்ள ஒரு காலி நிலத்தில் அந்த எட்டு இரும்புத் தூண்களை மேலும் ஏழு இரும்புத் தூண்களுக்கு எதிரில் வரிசையாக அடுக்கி வைத்திருந்தனர்.

அந்தத் தூண்கள் விழாமல் இருப்பதற்கு எவ்வித நடவடிக் கையும் எடுக்கப்படவில்லை. மேற்பார்வையாளர் மேலும் நான்கு இரும்புத் தூண்களை இவ்விரண்டு வரிசைகளுக்கு இடையில் சாய்த்து வைத்தார். ஆனால் இவ்வாறு வைப்பது பாதுகாப்பானது அல்ல என்று உணர்ந்த மேற்பார்வையாளர் அந்த நான்குத் தூண்களையும் பாரந்தூக்கி கொண்டு தூக்கினார். அதனை அடுத்து, மரப்பலகை ஒன்றை நிலத்தில் வைக்குமாறு அவர் ஹசானையும் அவரது சக ஊழியரையும் பணித்தார். ஹசான் மரப்பலகையை வைத்தபோது அடுக்கி வைக் கப்பட்டிருந்த எட்டு தூண்களும் அவர் மீது விழுந்தன. ஹசான் மீது விழுந்த தூண்கள் பாரந்தூக்கி கொண்டு அப்புறப் படுத்தப்பட்டன.

 

சிராங்கூன் பகுதியில் பாதுகாப்புக் குளறுபடிகளை நேரடியாகக் கண்டறியும் அரசு அதிகாரிகள். படம்: மனிதவள அமைச்சு

இப்பகுதியில் மேலும் செய்திகள்

டெம்பனிஸ் சென்ட்ரல் 7, புளோக் 524 ஏக்கு நீலநிற மறுபயனீட்டுத் தொட்டியில் உள்ள பொருட்களை எடுத்துச் செல்லும் கனரக வாகனம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

11 Nov 2019

மறுபயனீடு எளிதாகிறது