பணம் கையாடிய துணை முதல்வருக்கு அபராதம்

பணம் கையாடிய குழந்தைப் பராமரிப்பு நிலையம் ஒன்றின் முன்னாள் துணை முதல்வருக்கு 10,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நம்பிக்கைத் துரோகக் குற்றம் புரிந்ததை 28 வயது நூருல் ஜான்னா அகமது ஒப்புக் கொண்டார். ரிபப்பளிக் பலதுறைத் தொழிற்கல்லூரியில் கிண்டர் லேண்ட் குழந்தைப் பராமரிப்பு நிலையத்தின் வாடிக்கையாளர்கள் செலுத்திய கட்டணத் தொகையில் 9,664 வெள்ளியை அவர் கையாடி னார். இந்தக் குற்றச் செயலை அவர் 2014ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரை புரிந்தார். வாடிக்கையாளர்களிடமிருந்து பெறப்படும் கட்டணத் தொகையை அன்றைய தினத்திலேயே வங்கிக் கணக்கில் போட்டுவிட வேண்டும் என்று நிலையம் விதிமுறை கொண் டிருந்ததாக நீதிமன்றத்தில் தெரி விக்கப்பட்டது.

வங்கி மூடிய பிறகு கட்டணம் செலுத்தப்பட்டால் அதைப் பத்திரமாக வைத்து மறுநாள் வங்கிக் கணக்கில் போட்டுவிடுவதே துணை முதல்வர் என்கிற முறையில் நூருல்ஜன்னாவின் பொறுப்புகளில் ஒன்றாகும்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

கோப்புப்படம்: நியூ கிரியேஷன் தேவாலயம்/ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

22 Nov 2019

$300 மில்லியனுக்கு கடைத் தொகுதியை வாங்கிய நியூ கிரியேஷன் தேவாலயம்

2012ல் கேரோசல் நிறுவனத்தை (இடமிருந்து) மார்கஸ் டான், குவெக் சியூ ருய், லுகாஸ் நூ ஆகியோர் தொடங்கினர். கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

22 Nov 2019

‘கேரோசல்’ இணையத் தளத்தின் மதிப்பு ஒரு பில்லியன் வெள்ளியாக அதிகரிப்பு