30வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் தெம்பனிஸ் தொடக்கக் கல்லூரி

தெம்ப­னிஸ் தொடக்­கக்­கல்­லூரி தனது 30வது ஆண்டு நிறைவைக் கொண்டா­டு­கிறது. ஓராண்­டுக்­குத் தொடரும் கொண்டாட்­டங்களின் தொடக்க விழா நேற்று நடை­ பெற்­றது. நேற்றைய நிகழ்ச்­சி­யில் மாண­வர்­கள், ஆசி­ரி­யர்­கள், பெற்றோர், கல்லூரி­யு­டன் தொடர்­புடைய பலரின் பங்­கேற்பில் மூன்று கிலோ­மீட்­டர் தொலை­வுக்­கான குழு நடை மேற்­கொள்­ளப்­பட்­டது. இவ்­வாண்டு ஜூன் மாதத்­துக் ­குள் கல்லூரியைச் சேர்ந்த பங்­கேற்­பா­ளர்­கள் ஒவ்­வொ­ரு­வ­ரும் 300 கிலோ­மீட்­டர் தொலைவைக் கடக்­கத் திட்டம் வகுக்­கப்­பட்­டுள்­ளது.

கல்லூரியைச் சேர்ந்த பலரும் மொத்தம் 100,000 கி.மீ. தூரத்தைக் கடக்­கும் சவாலும் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது. இந்தச் சவாலை முடிப்­ப­தன் வழி­யா­கத் திரட்­டப்­படும் $60,000 நிதி வட­கிழக்கு வட்­டா­ரத்­தில் இருக்­கும் வசதி குறைந்­தோ­ருக்­காக உண வுப் பொருட்­கள் வாங்­கு­வதற்கு வழங்கப்­படும் என அக்கல்லூரியின் முதல்­வர் பேமலா யூங் தெரி­ வித்­தார். வயதான மூத்தோர் வசிக்­கும் ‘மாரல் ஹோம்’ஐச் சேர்ந்த குடி ­யி­ருப்­பா­ளர்­களுக்கு உதவியும் வழங்கப்­பட்­டது.

எதிர்­வ­ரும் சீனப்­புத்­தாண்­டுக் கொண்டாட்­டங்களு­டன் கல்லூரி­யில் கொண்டாட்­டச் சூழலை ஏற்­படுத்­தும் நோக்கில் நடத்­தப்­பட்ட ‘லோ=ஹெய்’யில் பல இன மாண­வர்­கள், ஆசி­ரி­யர்­கள் பங்­கேற்­ற­னர்.  
படம்: தெம்பனிஸ் தொடக்கக் கல்லூரி