நடைமேடை இடைவெளியில் பெண்ணின் கால் சிக்கியது

சக்கர நாற்­கா­லி­யில் அமர்ந்­தி­ருந்த தம் தாயா­ரு­டன் சைனா ­ட­வுன் எம்­ஆர்டி நிலை­யத்­தில் ரயி­லி­ல் இ­ருந்து வெளியேற முற்­பட்ட திரு­வாட்டி வாங், 45, எனும் மாதின் வலது கால் ரயி­லுக்­கும் நடை­மேடைக்­கும் இடை­­யில் சிக்­கிக்­கொண்டது. வியாழன் பிற்­ப­கல் 2.05 மணி ­ய­ள­வில் நேர்ந்த இந்தச் சம்ப­வம் பய­ணி­களிடையே பதற்­றத்தை ஏற்­படுத்­தி­யது. பய­ணி­கள் பலர் அந்த ரயில்­பெட்­டி­யின் கதவு மூடி­வி­டா­மல் இருக்க வேண்டிய முயற்­சி­களை மேற்­கொண்ட­னர். சிக்­கிக்­கொண்ட காலை விடு­விக்­கும்­போது வலியும் காலில் முறிவு ஏற்­பட்டு விடுமோ என்ற அச்­சமும் ஏற்­பட்­ட­தாக திரு­வாட்டி வாங் கூறினார்.

தக­வ­ல­றிந்து விரைந்து சென்ற சிங்கப்­பூர் குடிமைத் தற்­காப்­புப் படை­யி­னர் நீராற்­ற­லால் இயக்­கப்­படும் கரு­வி­களைக் கொண்டு அவரது காலை வி­டு­வித்தனர். லேசான காய­முற்ற திரு­வாட்டி வாங், தம்­முடைய 70 வயதுத் தாயாரை வீட்­டுக்கு அழைத்­துச் செல்ல வேண்டும் எனக் கூறி மருத்­து­வ­மனைக்­குச் செல்ல மறுத்­து­விட்­டார். இந்தச் சம்பவம் கார ணமாக அந்தத் தடத்தில் ரயில் சேவை சற்றுத் தாமனதானது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

சிங்கப்பூர் நாணய ஆணைய பசுமை செயல்திட்டத்தின் பல புதிய முயற்சிகளை நேற்று தொடங்கி வைத்துப் பேசினார் கல்வி அமைச்சர் ஓங் யி காங் . படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

12 Nov 2019

பருவநிலை பசுமை திட்டங்களுக்கு US$2 பில்லியன் முதலீடு

கூடுதல் வசதிகளுடன் கூடிய புதிய மின்சாரப் பேருந்துகள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

12 Nov 2019

அடுத்த ஆண்டு துவக்கத்திலிருந்து 60 மின்சாரப் பேருந்துகள்

குடிபோதையில் வாக்குவாதம் செய்துகொண்டிருந்த அலிஃபை மடக்கிப் பிடித்து கைது செய்த போலிசார். படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ், ஃபேஸ்புக்

12 Nov 2019

குடிபோதையில் வாக்குவாதம்: பாடகர் அலிஃப் அசிஸ் கைது