வீடு புதுப்பிப்பு நிறுவனங்களுக்கு புதிய அங்கீகாரத் திட்டம்

வீடு புதுப்பிப்பு நிறுவனங்களுக்கு புதிய அங்கீகாரத் திட்டம் தொடங் கப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் நம்பிக்கையான புதுப்பிப்பு நிறுவனங்களைத் தேடும் உரிமையாளர்களுக்கு நேற்று அறிமுகமான புதிய அங்கீ காரத் திட்டம் பெரும் உதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதுப்பிப்பு நிறுவனங்கள் மூடப் பட்டாலோ அல்லது நொடித்துப் போனாலோ வைப்புத் தொகை செயல்பாடு பத்திரத்தின் மூலம் உரிமையாளர்களைப் பாதுகாப்பது ‘கேஸ்டிரஸ்ட்=ஆர்சிஎம்ஏ’ என்ற புதிய அங்கீகாரத் திட்டத்தின் நோக்கமாகும். தற்போதைய கேஸ்டிரஸ்ட் அங்கீகாரத் திட்டம் மேம்படுத்தப்பட்டு புதிய திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

பழைய திட்டத்தில் வைப்புத் தொகையைப் பாதுகாக்கும் அம்சம் இல்லை. தற்சமயம் 30 கேஸ்டிரஸ்ட் அங்கீகாரம் பெற்ற புதுப்பிப்பு நிறு வனங்கள் உள்ளன. புதிய கேஸ்டிரஸ்ட்=ஆர்சிஎம்ஏ திட்டத்தை கேஸ் எனும் சிங்கப்பூர் பயனீட்டாளர் சங்கமும் சிங்கப்பூர் புதுப்பிப்பு ஒப்பந்தகாரர்களும் மூலப் பொருள் விநியோகிப்பாளர்கள் சங்கமும் உருவாக்கி இருக்கின்றன. செலவுகள் வெளிப்படையாக இருப்பதையும் வேலைகளுக்கு பொறுப்பு ஏற்பதையும் புதிய அங்கீ காரத் திட்டம் உறுதி செய்கிறது.

மேலும் பழைய, புதிய கேஸ் டிரஸ்ட் திட்டத்தின்படி நிறுவனங்கள் தெளிவான, முறையான வகையில் பிரச்சினைகளைத் தீர்த் துக்கொள்ளும் வழிமுறைகளைக் கொண்டிருப்பது அவசியம். பயிற்சி பெற்ற விற்பனை யாளர்கள், பணத்தைத் திருப்பிக் கொடுப்பதில் தெளிவான கொள் கை, வேலையிடத்தில் வேலைகளை கட்டாயமாக மதிப்பிடுதல் போன்ற அம்சங்களும் இரண்டு திட்டங் களில் உள்ளடக்கியிருக்கின்றன. புதிய திட்டம் தொடங்கி வைக்கப்பட்ட நிகழ்ச்சியில் அத் திட்டத்தின் கீழ் அங்கீகாரம் பெற்ற முதல் ஐந்து புதுப்பிப்பு நிறுவனங் கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

கப்பலில் இருந்த மருத்துவ உதவிக்குழு இதய சுவாசமூட்டல் உட்பட பல்வேறு சிகிச்சைகள் அளித்தபோதும் சிறுவனை உயிர்ப்பிக்க முடியவில்லை என்று பேச்சாளர் குறிப்பிட்டார். கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

19 Nov 2019

சிங்கப்பூரிலிருந்து கிளம்பிய சொகுசுக் கப்பலின் நீச்சல் குளத்தில் மூழ்கி சிறுவன் மரணம்

காணொளி பதிவேற்றப்படுவதற்கு முன்பாக புகைப்படம் அந்த இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவேற்றப்பட்டது. படம், காணொளி: ‘ஃபிக்சீஎஸ்ஜிமீம்ஸ்’ எனும் ‘மீம்’ இன்ஸ்டகிராம் பக்கம்

19 Nov 2019

நடைபாதைக் கூரையின்மீது மின்-ஸ்கூட்டர் ஓட்டிய இளையர்

மனைவியுடனான சிறு கருத்து வேறுபாடுகளுக்குக்கூட அவரை அடிக்கும் பழக்கம் கொண்ட ரிட்ஸுவான் மேகா அப்துல் ரஹ்மான், அந்தப் பழக்கத்தை மாற்றுவதற்காக கோபத்தை சிறுவன் மீது திருப்பியதாக தடயவியல் மனநோய் நிபுணரான மருத்துவர் சியோவ் எங்குவானிடம் தெரிவித்தார். படம்: ஃபேஸ்புக்

19 Nov 2019

கொடூரமாகத் துன்புறுத்தப்பட்டு இறந்த சிறுவன்: பாடம் புகட்ட எண்ணி உள்ளங்கையில் சூடுபோட்ட தந்தை