‘சால்மோனெல்லா’; சாலட் கீரைகள் மீட்பு

ஆஸ்திரேலியாவிலிருந்து தருவிக்கப்பட்டு சிங்கப்பூரில் விற்கப்படும் ‘வாஷ் அன் டாஸ்’ என்று அழைக்கப்படும் சாலட் கீரைகள் மீட்டுக் கொள்ளப்பட்டுள்ளன. அதில் சால்மோனெல்லா கிருமி இருப்பதாக நேற்று வெளி யிட்ட அறிக்கையில் சிங்கப்பூர் வேளாண், உணவு, கால்நடை மருத்துவ ஆணையம் தெரிவித் தது. ‘வாஷ் அன் டாஸ்’ கீரைகளை ஆஸ்திரேலியாவின் ‘டிரைபோட் ஃபார்மர்ஸ்’ உற்பத்தி செய்து வரு கிறது. இம்மாதம் 14ஆம் தேதி வரை பயன்படுத்தப்படும் சாலட் கீரைப் பொட்டலங்கள் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் இவற்றை வாங்கிய வாடிக்கையாளர்கள் பயன்படுத்த வேண்டாம் என்றும் ஆணையம் அறிவுறுத்தியது.

வாட்டர்கிரஸ், சோரெல், பேபி காஸ், பேபி ஸ்பினாச், சாலட் மிக்ஸ், வைல்ட் ராக்கெட் ஆகியவையும் மீட்டுக் கொள்ளப்பட்டவைகளில் அடங்கும். முன்னதாக குறிப்பிட்ட காலத் தில் தயாரிக்கப்பட்ட உல்வர்த்ஸ், வாஷ் அன் டாஸ், கோல்ஸ், சுப்பா சாலட், கிளியர் ஃபிளிம் போன்ற பெயர்களைக் கொண்ட சாலட் கீரைகளில் சால்மோனெல்லா கலந்திருப்பதால் மீட்டுக் கொள்ளப் படுவதாக ஆஸ்திரேலியா, நியூ சிலாந்து உணவுத் தர அமைப்பு குறிப்பிட்டது. இதில் ‘வாஷ் அன் டாஸ்’ சாலட் கீரைகள் சிங்கப்பூரில் இறக்குமதி செய்யப்பட்டு விற் பனை செய்யப்படுகிறது. இதன் தொடர்பில், ஆணையம் இந்த சாலட் கீரைகளைச் சந்தையி லிருந்து மீட்டுக் கொள்ள உத்தர விட்டது. இதனை மீட்டுக் கொள்ளும் பணி தற்போது முற்றுப்பெற்று உள்ளதாகவும் ஆணையம் தெரி வித்தது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

லோரோங் செசுவாயில் ஒரு காருக்குள் சிறுவன் அசைவின்றிக் கிடந்ததாகவும் காருக்கு அருகில் 41 வயது மாது அசைவின்றிக் கிடந்ததாகவும் கூறப்பட்டது. படங்கள்: ஷின் மின்

14 Nov 2019

புக்கிட் தீமா தடைசெய்யப்பட்ட பகுதியில் சிறுவன், பெண் ஆகியோரது சடலங்கள்

சாங்கி வர்த்தகப் பூங்காவில் உள்ள டிபிஎஸ் வங்கியின் படம். ஹாங்காங்கில் உள்ள டிபிஎஸ் வங்கிக் கிளை ஒன்றுக்கு அருகில் உள்ள கட்டடத்தில் நேற்று தீப்பற்றியது. கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

14 Nov 2019

ஹாங்காங் டிபிஎஸ் வங்கியில் சிங்கப்பூர் பிரதமரை இழிவுபடுத்தும் விதத்திலான கிறுக்கல்கள் அழிக்கப்பட்டன

அன்றைய தினம் காலை 11 மணி முதல் தங்களது பள்ளிகளில் மாணவர்கள் தேர்வு முடிவுகளைப் பெற்றுக்கொள்ளலாம். கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

14 Nov 2019

பிஎஸ்எல்இ தேர்வு முடிவுகள் நவம்பர் 21ல் வெளியீடு