நைஜீரியாவில் கடத்தப்பட்ட சிங்கப்பூர் கப்பல் விடுவிப்பு

சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட ‘சாஃப்மரின் குராமோ’ என்ற கொள்கல கப்பல் நைஜீரியா கடற்பகுதியில் கடத்தப்பட்டது. ஆனால் அது பின்னர் விடு விக்கப்பட்டதாக சிங்கப்பூர் கடற் துறை, துறைமுக ஆணையம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது. வெள்ளிக்கிழமை சிங்கப்பூர் நேரப்படி இரவு 8.06 மணி அளவில் அந்தக் கப்பல் கடத்தப் பட்டது. அந்தச் சமயத்தில் காங் கோவின் பாயிண்ட் நொய்ரியி லிருந்து நைஜீரியாவின் போர்ட் ஒன்னை நோக்கி கப்பல் சென்று கொண்டிருந்தது. சனிக்கிழமை விடியற்காலை 1.20 மணிக்கு விடுவிக்கப்பட்ட கப்பலையும் அதிலிருந்த ஊழியர் களையும் நைஜீரிய அதிகாரிகள் மீட்டனர்.

அனைத்து ஊழியர்களும் பாதுகாப்பாக இருப்பதாக நைஜீரிய அதிகாரிகள் கூறினர். அந்தக் கப்பலில் பிலிப்பீன்ஸ், தென் ஆப்பிரிக்கா, இந்தியா, பிரிட்டன், தாய்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த 25 ஊழி யர்கள் இருந்தனர். ஆனால் அவர்களில் சிங்கப்பூரர்கள் யாரும் இல்லை என்று சிங்கப்பூர் கடற்துறை, துறைமுக ஆணையம் குறிப்பிட்டது. ‘சாஃப்மரின் குராமோ’ கப்பலை ‘மேய்ர்ஸ்க் லைன்’ நிர்வகித்து வருகிறது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

தலையை வேனில் மோதியதால் குழந்தை இறந்திருக்கலாம் என்று கூறப்பட்டது. படம்: ஃபேஸ்புக்

12 Nov 2019

தலையை காரில் மோதியதில் குழந்தை உயிரிழப்பு; தாயின் ஆண் நண்பர்மீது குற்றச்சாட்டு

சிங்கப்பூர் நாணய ஆணைய பசுமை செயல்திட்டத்தின் பல புதிய முயற்சிகளை நேற்று தொடங்கி வைத்துப் பேசினார் கல்வி அமைச்சர் ஓங் யி காங் . படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

12 Nov 2019

பருவநிலை பசுமை திட்டங்களுக்கு US$2 பில்லியன் முதலீடு

கூடுதல் வசதிகளுடன் கூடிய புதிய மின்சாரப் பேருந்துகள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

12 Nov 2019

அடுத்த ஆண்டு துவக்கத்திலிருந்து 60 மின்சாரப் பேருந்துகள்