பொது வாடகை வீடுகளில் வசிப்போர் வீடு வாங்க கூடுதல் உதவிகள்

பொது வாடகைக் குடி­யி­ருப்­பு­களில் வசித்த 500க்கும் மேற்­பட்­டோர் கடந்த ஆண்டு முதல்முறையாக வீடு வாங்­கி­ய­தாக வீடமைப்பு வாரியம் தெரி­வித்­துள்­ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதத்­தில் 12,411 வீடுகள் விற்­பனைக்கு விடப்­பட்­டன. அதற்­குப் பிறகு வீடு வாங்கிய அத்­தகை­யோ­ரின் எண்­ணிக்கை பற்றிய விவரம் இன்னும் வெளி­யா­க­வில்லை. 2014ஆம் ஆண்டில் 750 பேர் இந்தப் பிரிவில் வீடு வாங்கி இருந்த­னர். 2011ஆம் ஆண்டு முதல் 3,000க்கும் அதி­க­மா­னோர் விருப்­பத்­திற்­கேற்ப கட்­டித்­த­ரப்­படும் வீடுகள் அல்லது எஞ்­சி­யுள்ள அடுக்­கு­மா­டிக் குடி­யி­ருப்­பு­களின் விற்பனை ஆகி­ய­வற்­றின் கீழ் வீடுகளை வாங்­கி­னர். ஓராண்­டுக்கு முன்பு இந்த எண்­ணிக்கை 2,500 ஆக இருந்தது. ஒவ்வோர் ஆண்டும் சுமார் 600 குடும்பத்­தார் இந்தப் பிரிவில் வீடு வாங்­கு­வ­தாக வீடமைப்பு வளர்ச்­சிக் கழகம் தெரி­வித்­தது.

பொது வாடகைத் திட்­டத்­தின் கீழ், $1,500 வரை மாத வரு­மா­னம் உள்ள குடும்பங்கள் மிகவும் குறைவான வாடகை­யில் வீடு­களைப் பெறு­கின்றன. ஓரறை வீடு­களுக்­கான வாடகை $26; ஈரறை வீடு­களுக்கு $44. ஈராண்­டு­களுக்கு ஒரு முறை ஆய்­வுக்­குப் பிறகு வாடகை புதுப்­பிக்­கப்­படும். “நிலையான வரு­மா­னம் பெறும் குடும்பங்கள் அடுக்­கு­மாடி குடி­யி­ருப்­பு­களை வாங்க ஊக்­கு­விக்­கப்­ படு­வர்,” என கழகம் கூறிற்று.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

மனைவியுடன் ரவிச்சந்திரன் (படங்கள்: முருகேசன்/இட்ஸ்‌ரெயினிங்ரெயின்கோட்ஸ்)

19 Nov 2019

வாழத் தொடங்கியதும் வந்து முடித்தது மரணம்

பானத்தைக் குடித்த திருவாட்டி வாங், அதில் கண்ணாடித் துகள்கள் இருப்பதைக் கண்டுபிடித்தார். படங்கள்: திருவாட்டி வாங்

19 Nov 2019

சிறுவன் குடித்த 'ஸ்மூதி'யில் கண்ணாடித் துகள்கள்; மன்னிப்புக் கோரிய உணவகம்

கணவருடன் சேர்ந்து $191,000 தொகையை மோசடி செய்த லூயிஸ் லாய் பெய் சியனுக்கு சிறைத் தண்டனை. கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

19 Nov 2019

நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தை ஏமாற்றிய பெண்ணுக்கு 17 மாதச் சிறை