ஊழியர்களுக்கு நன்றி கூறிய அமைச்சர்கள்

சீனப் புத்தாண்டு முதல் நாளில் தங்கள் சீன சகாக்கள் பண்டிகைக் குதூகலத்தில் திளைத்திருக்க அவர்களின் வேலையையும் சேர்த்துக் கவனித்துக் கொள்ளும் பாணி சிங்கப்பூரில் காணப்படும் ஒரு வழக்கம். அதன் தொடர்பில் அத்தியாவசிய சேவையில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்குத் தங்கள் நன்றி யையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்ள அமைச்சர்கள் சிலர் புத்தாண்டின் முதல் நாளில் சில இடங்களுக்குச் சென்றனர்.

சுகாதார அமைச்சர் கான் கிம் யோங்கும் அவரது துணைவியாரும் நேற்று முன்தினம் தேசிய பல்கலைக்கழக மருத்துமனையின் சில படுக்கைப் பிரிவுகளுக்குச் சென்று அங்குள்ள மருத்துவர்கள், தாதிகள், ஊழியர்கள், நோயாளிகள் ஆகியோருக்கு மாண்டரின் ஆரஞ்சுப் பழங்களையும் ‘ஹாங் பாவ்’ அன்பளிப்பு உறைகளையும் வழங்கினார்கள். பின்னர் சில மருத்துவமனை ஊழியர்களுடன் சேர்ந்து சுகாதார அமைச்சர் கான் ‘லோ ஹெய்’ உணவைக் கிண்டி, கிளறி வாழ்த் துகளைப் பரிமாறிக் கொண்டார்.

சுகாதார அமைச்சர் கான் கிம் யோங்கும் (இடமிருந்து 2வது) அவரது துணைவி யாரும் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையில் நோயாளி ஒருவ ருக்கு மாண்டரின் ஆரஞ்சுப் பழங் களையும் ‘ஹாங் பாவ்’ உறையையும் கொடுக்கின்றனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்