இளம் இந்தியர்களை அதிகம் பாதிக்கக்கூடிய ‘டிமென்‌ஷியா’

வில்சன் சைலஸ்

இளம் இந்தியர்களை அதிகம் பாதிக்கக்கூடிய ‘டிமென்‌ஷியா கேட்ட கேள்விக்குப் பதில் கொடுத்த பிறகும் சில விநாடிக ளுக்குள் அதே கேள்வியைத் திரும்பக் கேட்பார் 60 வயது திருமதி ஜெனிஃபர் லோ. தொடக் கத்தில் அவரது மகன் திரு ஜோ‌ஷுவா லிம், 30, அதைப் பொருட்படுத்தவில்லை. ஆனால், ஒரு சில ஆண்டு களுக்கு முன் நிர்வாகியாக வேலை செய்த அலுவலகத்தில் பத்திரங்கள் வைத்த இடத்தை திருமதி ஜெனிஃபர் மறந்துபோக உடனடியாக வேலையிலிருந்து நீக்கப்பட்டார் அவர்.

வீட்டிலேயும் எந்தப் பொருளை எங்கு வைத் தார் என்ற நினைவும் அவருக்கு நிழலானது. தாயின் நிலை அறிந்து பல துறை மருந்தகத்தின் உதவியை நாடிச் சென்ற ஜோ‌ஷுவா, தேசிய பல்கலைக்கழக மருத்துவம னைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ‘டிமென்‌ஷியா’ எனும் அதீத ஞாபக மறதி நோயால் திருமதி ஜெனிஃபர் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதை ஜோ‌ஷுவாவால் அப்போது நம்ப முடியவில்லை. நாளடைவில் உணவு உட் கொள்ளுதல், பிறருடன் உரையாடு தல் ஆகியவை மெல்ல மெல்ல குறைந்தபோது தாயாருக்கு உதவி செய்யவேண்டும் என தேசிய நரம்பியல் மருத்துவக் கழகத்துக்கு திருமதி ஜெனிஃபரை அழைத்துச் சென்ற ஜோ‌ஷுவாவால் ஓரளவு தாயாரைக் காப்பாற்ற முடிந்தது.

தேசிய நரம்பியல் மருத்துவக் கழகத்தின் இணைப் பேராசிரியர் நாகேந்திரன் கந்தையா (இடது) அதீத ஞாபக மறதி நோயாளியான திருவாட்டி ஜெனிஃபர் லோவைப் பரிசோதிக்கிறார். நடுவில் இருப்பவர் திருவாட்டி லோவின் புதல்வர் ஜோ‌ஷுவா லிம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்