ஊழல் புகார் நிலையமாக மாறும் போலிஸ் சாவடி

லஞ்ச, ஊழல் புலனாய்வு மன்றத் தின் புதிய ஊழல் புகார் நிலையம் விட்லி அக்கம்பக்க போலிஸ் சாவடி வளாகத்தில் அமையவிருக்கிறது. இந்தப் புதிய நிலையம் இவ் வாண்டு டிசம்பர் முதல் செயல்படத் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதையடுத்து, அந்த வளா கத்தை ஒப்படைக்கும்விதமாக வரும் திங்ககட்கிழமையுடன் அப் போலிஸ் சாவடியுடனான தனது பணிகளை போலிஸ் நிறுத்திக் கொள்ளும். அந்தப் பணிகள் லஞ்ச, ஊழல் புலனாய்வு மன்றத் திற்கு மாற்றப்படும்.

247, விட்லி ரோட்டில் ஸ்டீ வன்ஸ் எம்ஆர்டி நிலையத்திற்கு அருகே அந்த நிலையம் அமைய விருப்பதால் லஞ்ச ஊழல் தொடர் பான சந்தேகத்துக்குரிய நட வடிக்கைகள் குறித்து புகார் அளிக்க பொதுமக்களுக்கு அதிக வசதியாக இருக்கும் என்று லஞ்ச ஊழல் புலனாய்வு மன்றமும் சிங் கப்பூர் போலிஸ் படையும் நேற்று வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவித்தன.

விட்லி அக்கம்பக்க போலிஸ் சாவடி. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்