துடிப்புடன் மூப்படைய $3பி. திட்ட அறிக்கை

வய­தா­னோர் துடிப்­பு­டனும் சுகா­தா­ர­த்துடனும் மூப்­படை­வதற்­கான $3 பில்­லி­யன் மதிப்­பி­லான செயல்­முறைத் திட்­டத்­தின் அறிக்கை வெளி­யி­டப்­பட்­டுள்­ளது. 70 நட­வ­டிக்கை­களைக் கொண்ட துடிப்­பு­டன் மூப்­படை­வதற்­கான திட்ட அறிக்கை நேற்று நடை­பெற்ற ‘எஸ்­ஜி­ஃ­பி­யூச்­சர்’ உரை­யா­டல் நிகழ்ச்சி ஒன்றில் வெளியீடு கண்டது. சுகாதார மூத்த துணை அமைச்­சர் டாக்டர் ஏமி கோர், “பலர் மூப்­படை­வது நாட்டின் எதிர்­கா­லத்­தில் தாக்­கத்தை ஏற்­படுத்­தக்­கூ­டிய முக்­கி­ய­மான அம்சம்,” என்று நேற்றைய நிகழ்ச்­சி­யில் குறிப்­பிட்­டார்.

2014, 2015 ஆண்­டு­களில் பல தொடர் பொதுமக்கள் கலந் துரையாடல்களுக்­குப் பிறகு கடந்த ஆகஸ்ட் மாதத்­தில் இந்தத் திட்டம் உரு­வாக்­கப்­பட்­டது. மறு வேலை­வாய்ப்­புக்­கான வயதை 65லிருந்து 67ஆக உயர்த்­து­தல், 2020ஆம் ஆண்­டுக்­குள் மேலும் 40 பகல்­நேர மூத்தோர் பரா­ம­ரிப்பு நிலை­யங்களை அமைத் தல், மூத்­தோ­ருக்­குப் பிடித்த நட­வ­டிக்கை­களை அவர்­கள் மேற்­ கொள்­வதற்­கான தேசிய சில்வர் அகா­ட­மியை உரு­வாக்­கு­தல் ஆகிய முயற்­சி­கள் இந்தத் திட்­டத்­தில் அடங்­கும். இந்தத் திட்­டத்­தின் நட ­வ­டிக்கை­களை எவ்வாறு செயல் ­படுத்­து­வது என்பது குறித்த கலந்­துரை­யா­டல்­கள் தொடர்ந்து நடத்­தப்­படும் என டாக்டர் கோர் தெரி­வித்­தார். முழு அறிக்கையை www.successful-ageing.sg என்ற இணையப்பக்கத்தில் காணலாம்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

பிள்ளைகள் ஆரோக்கியமாக இருப்பதற்காக அனைவரும் ஒன்றிணைந்து செயல்படவேண்டும் என்று நேற்று வடகிழக்கு வட்டார மேயர் டெஸ்மண்ட் சூ கூறினார். படம்: 'கெல்லோக்ஸ்'

21 Jul 2019

ஆரோக்கிய உணவுப் பழக்கத்தை ஊக்குவிக்கும் ஓராண்டு திட்டம்

தொண்டூழியர்கள், அதிபர் சவால் நன்கொடைத் திட்டம் மூலம் பயனடைந்து வருபவர்கள் ஆகியோருடன் திருவாட்டி ஹலிமா சந்தித்துப் பேசியதுடன் தெரு காற்பந்து, கூடைப்பந்து, வலைப்பந்து, நடனம் போன்ற பல அங்கங்களில் பங்கேற்றார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

21 Jul 2019

அதிபர் ஹலிமா யாக்கோப்: சமூகத்திற்கு ஆதரவு அளிக்க இளையர்கள் முன்வர வேண்டும்