பிஓஎஸ்பி-யின் சுவரைத் துளைத்த பாரந்தூக்கி பாதுகாப்பாக அகற்றப்பட்டது

உட்­லண்ட்­சில் புதன்­கி­ழமை காலை 7 மணி­ய­ள­வில் அங்­குள்ள பிஓ­எஸ்பி வங்­கிக் கிளை அலு­வ­லகத்தின் சுவரைத் துளைத்­துக்­கொண்டு சாய்ந்த ராட்­சத பாரந்­தூக்கி ஒரு வழி­யாக நேற்று அதி­காலை 3 மணிக்கு அங்­கி­ருந்து அப்­பு­றப்­படுத்­தப்­பட்­டது. உட்­லண்ட்ஸ் செண்டர் ரோடு, அட்­மி­ரல்டி ரோடு ஆகிய சாலை­களின் சந்­திப்­பில் இருந்து வளை­யும்­போது ஒரு பக்­க­மாக சாய்ந்த­தால் வழுக்கி சாலையை விட்டு நழுவி சாய்ந்தது. சாய்ந்த பாரந்­தூக்கி, அங்­கி­ருந்த வீவக புளோக் 2ஏல் உள்ள பிஓ­எஸ்பி கிளை­யின் கட்­ட­டச் சுவ­ரில் 2 மீட்டர் அக­லத்­திற்­குப் பெரிய ஓட்டை போட்டு விட்டது. நல்ல வேளை­யாக இந்தச் சம்ப­வத்­தில் உயிர்ச்­சே­தம் ஏது­மில்லை. பாரந்­தூக்­கியை அப்­பு­றப்­படுத்­தும் பணி திறனா­ளர்­க­ளால் நன்கு திட்­ட­மி­டப்­பட்டு புதன்­கி­ழமை நள்­ளி­ர­வில் தொடங்கப்­பட்­டது. அப்­­போது அரு­கே­யுள்ள சாலை­கள் போக்­கு­வ­ரத்­துக்கு மூடப்பட்­டன.

சாய்ந்து கிடந்த பாரந்­தூக்­கியை அங்­கி­ருந்து நகர்த்­து­வ­தற்கு பின்­னி­ரவு 1.00 மணிக்கு இரண்டு பெரிய பாரந்­தூக்­கிகள் சம்பவ இடத்­திற்­குக் கொண்­டு­வ­ரப்­பட்­டன. அந்த இரு ராட்­சத பாரந்­தூக்­கிகளில் இருந்து தடி­மனான இரும்­புக் கம்­பி­கள் கொண்டு சாய்ந்து கிடந்த பாரந்­தூக்கி நகர்த்தப்பட்டது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon