கள்ளப் பயணம்: அபராதம் $50 ஆக அதிகரிப்பு

பொதுப் பேருந்து, ரயில் போன்ற பொதுப்போக்குவரத்துகளில் கட்டணம் செலுத்தாமலோ அல் லது சரியான கட்டணத்தைச் செலுத்தாமலோ செல்லும் பயணி களுக்கான அபராதம் $50 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இது வரும் திங்கட்கிழமை முதல் நடப்புக்கு வருகிறது. ஏற்கெனவே $20 ஆக இருந்த இந்த அபராதக் கட்டணம் இப் போது இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது. சலுகை அட்டைகளைத் தவறான முறையில் பயன்படுத்துப வர்களுக்கும் இது பொருந்தும்.

இதனைப் பொதுப்போக்குவரத்து மன்றம் ஓர் அறிக்கையில் நேற்று தெரிவித்தது. “கட்டணம் செலுத்தாமல் பயணம் செய்யும் போக்கைக் குறைக்கும் வகையில் இந்த அபராதம் இரட்டிப்பாக்கப் பட்டுள்ளது,” என்றார் பொதுப் போக்குவரத்து மன்றத்தின் தலைமை நிர்வாகி ஆல்வின் சியா. சரியான கட்டணம் செலுத் தாமல் பயணம் செய்வோர், ஓசி­யில் பயணம் செய்வோர் ஆகியோருக்கு எதிராக பிப்ரவரி 29ஆம் தேதி முதல் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இந்த நடவடிக்கை இப்போது உள்ள நடவடிக்கையில் வேறு படும் எனவும் பொதுப் போக்கு வரத்து மன்றம் தெரிவித்தது.