சுடச் சுடச் செய்திகள்

அங் மோ கியோ குடும்ப மருந்தகம் பார்க்வே ன்டன் மருத்துவ நிறுவனத்திடம் ஒப்படைப்பு

தேசிய சுகாதாரப் பராமரிப்புக் குழுமம் தற்போது அதற்குக் கீழ் இயங்கி வரும் அங் மோ கியோ குடும்ப மருந்தகத்தைத் பல மருந்தகங்களை நடத்தி வரும் பார்க்வே ன்டனிடம் ஒப்படைக் கவிருக்கிறது. வரும் செவ்வாய்க்கிழமை மருந்தகம் பார்க் ன்டனின் கீழ் இயங்கத் தொடங்கும். மருந்தகத்தை ஒப்படைக்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது. சுகாதார அமைச்சின் நிரந்தரச் செயலாளர் திருமதி டான் சிங் யீ அதில் கலந்துகொண்டார். அங் மோ கியோ குடும்ப மருந்தகம் 2013ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 18ஆம் தேதி இயங்கத் தொடங்கியதிலிருந்து தேசிய சுகாதாரப் பராமரிப்புக் குழுமம், பார்க்வே ஷன்டனுடன் இணைந்து பொதுவான நோய் களுக்கும் ஆஸ்துமா, மன அழுத்தம், நீரிழிவு நோய், உயர் ரத்தக் கொழுப்பு, பக்கவாதம் போன்ற நாட்பட்ட நோய்களுக்கும் சிகிச்சை அளித்து வந்துள்ளது.

அங் மோ கியோ குடும்ப மருந்தகத்தில் சிகிச்சை பெற்று வருபவர்களில் 96 விழுக் காட்டினருக்கு நாட்பட்ட நோய் காரணமாக நீண்ட நாள் பராமரிப்பு தேவைப்படுகிறது. இதுவரை அங் மோ கியோ பலதுறை மருந்தகத்தைச் சேர்ந்த 8,600க்கும் அதிகமான நோயாளிகள் அங் மோ கியோ குடும்ப மருந்தகத்தில் சுகாதாரப் பராமரிப்புச் சேவையைப் பெற முடிவெடுத்துள்ளனர்.

82 வயது திரு வி.கே. ஸ்ரீதரனின் (வலது) ரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்கும் அங் மோ கியோ குடும்ப மருந்தகத்தின் டாக்டர் கில்பர்ட் இயோ. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்