‘கார்கள் இல்லாத ஞாயிறு’ திட்டம் தொடங்கியது

‘கார்கள் அற்ற ஞாயிற்றுக்கிழமை கள்’ முன்னோடித் திட்டத்துக்கு ஆதரவு இருக்குமானால் அந்தத் திட்டம் நிரந்தரமான ஒன்றாக ஆகும். அதோடு மேலும் பல பகுதிகளுக்கும் அது விரிவு படுத்தப்படும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது. சிங்கப்பூரில் நேற்று ‘கார்கள் அற்ற ஞாயிற்றுக்கிழமை’ என்னும் முன்னோடித் திட்டம் பரிசோதனை அடிப்படையில் தொடங்கியது. அதன்படி குடிமைப் பகுதிகளி லும் மத்திய வர்த்தக வட்டாரப் பகுதிகளிலும் கார்களுக்குச் சாலைகள் அடைக்கப்பட்டன. தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங் பரிசோதனையின் போது இத்திட்டத்துக்கு ஆதரவு கிடைத்தால் திட்டம் நிரந்தரமாகும் என்றார்.

கார்கள் குறைந்த நாடாக சிங்கப்பூரை மாற்றும் நடவடிக்கை யின் ஒரு பகுதியாக இந்த முன்னோடித் திட்டம் இடம்பெறு கிறது. இப்போது முதல் ஜூலை மாதம் வரையில் ஒவ்வொரு மாத மும் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் பாடாங்கைச் சுற்றிலும் உள்ள சாலைகள் கார்களுக்கு மூடப் படும். நூற்றுக்கணக்கான சைக்கி ளோட்டிகள், ஓட்டக்காரர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சியும் நேற்று நடந் தது. போக்குவரத்து அமைச்சர் கோ பூன் வானுடன் சேர்ந்து அமைச்சர் வோங், கொடி அசைத்து அந்த ஓட்டத்தைத் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு வந்தருந்தவர் களின் எண்ணிக்கை ஊக்கமளிப் பதாக அமைச்சர் வோங் கூறினார். “வீதி எங்கும் பார்த்தால் ஒரே மக்களாகத் தெரிந்தது. சாலை களில் கார்கள் இல்லாமல் மக்களைக் காண்பதுதான் நமது இலக்கு,” என்றார் அவர்.

‘கார்கள் இல்லாத ஞாயிறு’ திட்டம் அறிமுகம் கண்ட நிகழ்ச்சியில் சைக்கிளோட்டியவாறு பங்கேற்ற போக்குவரத்து அமைச்சர் கோ பூன் வானும் தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங்கும் மகிழ்ச்சி தெரிவித்தனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

உதவித் தொகை பெற்ற பிள்ளைகளுடன் துணை அமைச்சர் ஸாக்கி முகம்மது.படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

09 Dec 2019

1,600க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு நிதியுதவி

நூல் வெளியீட்டு விழாவில் (இடமிருந்து வலம்) ஸ்டெஃபன் இங், யாஸ்மின் பஷீர், புத்தகத்தைப் புனைந்த ஆலன் ஜான், புத்தகத்தில் உள்ள படங்களை வரைந்த குவேக் ஹோங் ஷின், மோகன் பொன்னிச்சாமி.
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

09 Dec 2019

இனுக்காவைப் பற்றிய நூல் ஆகச் சிறந்த நூலாக அறிவிப்பு
ஆண்டுதோறும் நடைபெறும் சேன்டா ஃபார் ரன் விஷசில் சிறுவர்கள், பெரியவர்கள் எனப் பலர் பங்கேற்றனர்.  படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஆண்டுதோறும் நடைபெறும் சேன்டா ஃபார் ரன் விஷசில் சிறுவர்கள், பெரியவர்கள் எனப் பலர் பங்கேற்றனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

09 Dec 2019

கொடிய நோயால் பாதிக்கப்பட்டுள்ள பிள்ளைகளுக்கு நிதி திரட்டு