2016 தேசிய தின அணிவகுப்பிற்கு $39.4 மில்லியன் செலவு

சிங்கப்பூர் தேசிய விளையாட்டு அரங்கில் இவ்வாண்டு இடம்பெறும் தேசிய தின அணிவகுப்பிற்கு $39.4 மில்லியன் செலவாகும் என தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் தெரிவித்துள்ளார். முந்தைய ஆண்டுகளில் ஆகஸ்ட் 9ஆம் நாளன்று மரினா பே மிதக்கும் மேடையில் முன்பு இடம்பெற்ற அணிவகுப்புகளுக்கு ஆன செலவைப் போல இது இரு மடங்கு. மரினா பே மிதக்கும் மேடையில் இடம்பெற்ற அணிவகுப்புகளுக்கு $15.7 மி. முதல் $17.9 மி. வரை செலவானது. பாடாங்கில் 2010ஆம் ஆண்டு நடைபெற்ற அணிவகுப்பு நிகழ்ச்சிக்கு $20.6 மில்லியனும் சிங்கப்பூரின் பொன்விழா ஆண்டு அணிவகுப்பு நிகழ்ச்சிக்கு $40.5 மில்லியனும் செலவானதாகத் தெரிவிக்கப்பட்டது.

மொத்தத் தொகையில் பாதி, நிகழ்ச்சி அங்கங்களுக்கு ஒதுக் கப்படுவதாக அமைச்சர் இங் நாடாளுமன்றத்தில் நேற்று தெரி வித்தார். முந்தைய ஆண்டுகளில் 4 விழுக்காடாக இருந்த அரங்கப் பயன்பாட்டுச் செலவு இவ்வாண்டு 15% ஆக அதிகரித்து இருக்கிறது என்றும் திரு இங் குறிப்பிட்டார். தேசிய விளையாட்டரங்கம் 55,000 பேர் அமரும் வசதி கொண்டது. என்றாலும், சுமார் 275,000 பேர் நிகழ்ச்சிகளைக் கண்டு களிக்க அந்த அரங்கம் அனுமதிக் கும் என்றும் முந்தைய ஆண்டு களின் பார்வையாளர்களைப் போல இது இரு மடங்கிற்கும் அதிக மானது என்றும் அமைச்சர் சொன்னார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

பயனாளர்கள் தங்களுக்குக் கிடைத்த பள்ளிக்குத் திரும்புதல் பற்றுச்சீட்டுகளைக் கொண்டு, அங்கு நடைபெற்ற விற்பனைச் சந்தையில் சிறப்பு விலைக் கழிவுகளில் பள்ளிப்பைகளையும் காலணிகளையும் வாங்கிக்கொள்ளலாம்.  படம்: சாவ் பாவ்

07 Dec 2019

பள்ளிக்குத் தயாராவதற்கு உதவிக்கரம்

உரிமக் கட்டணங்களைத் தவிர்த்து, வைப்புத் தொகையாக சைக்கிள் ஒன்றுக்கு $30யை நிறுவனங்கள் செலுத்த வேண்டியிருந்தது. கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

07 Dec 2019

பகிர்வு சைக்கிள் நிறுவனங்களுக்கான உரிமக் கட்டணம் பாதியாகக் குறைப்பு

கூகல் வரைபடத்திலிருந்து எடுக்கப்பட்டது.

07 Dec 2019

ராபின்சன் சாலையில் மூன்று தடங்கள் நாளை மூடப்படும்