கடன் கேட்போரில் 10ல் 9 பேர் கடனறிக்கையை பார்ப்பதில்லை

சிங்கப்பூரில் புதிய கடன், கடன் ஏற்பாடு, மிகைப்பற்று, அல்லது கடன் அட்டைக்கு விண்ணப்பிப் போர் தங்கள் கடன் அறிக்கையில் என்ன இருக்கிறது என்பதை அறியாமலேயே இருக்கிறார்கள். கடந்த ஆண்டில் புதிய கடன் ஏற்பாடு கேட்டு விண்ணப்பித்த 870,766 பேரில் 85% தங்கள் சொந்த கடன் ஏற்பாட்டு விவரங் களைப் படித்தவர்களாகத் தெரிய வில்லை என்று சிங்கப்பூர் கடன் கண்காணிப்பு இலாகா தெரிவித்து உள்ளது. இந்த இலாகாவின் புள்ளி விவரங்களைப் பார்க்கையில், 21 முதல் 29 வரை வயதுள்ளவர்கள் தான் கடன்பெறுவதில் அதிக நாட்டத்துடன் இருக்கிறார்கள் என்பது தெரிகிறது. இதையடுத்த நிலையில் இருப் போர் 30 முதல் 34 வரை வயதுள் ளவர்கள். இவர்கள் 18%. அடுத்த நிலையில் 35 முதல் 39 வரை வயதுள்ளவர்களும் (16%) 40 முதல் 44வரை வயதுள்ளவர்கள் அடுத்த நிலையிலும் உள்ளனர்.

வீட்டுக் கடன், கார் வாங்க கடன், அல்லது கடன் அட்டை பெற விண்ணப்பிக்கும்போது தங் களுக்கு இலவசமாக கடன் அறிக்கை கிடைக்கும் என்பதை பயனீட்டாளர்கள் தெரிந்துகொள்ள சிங்கப்பூர் வங்கிகள் சங்கம் எடுத்துள்ள நடவடிக்கையைச் சிங் கப்பூர் கடன் கண்காணிப்பு இலாகா வரவேற்றுள்ளது.