தற்காப்பு அறிவியல் துறையில் மாணவர்கள்

வர்த்­தக ரீதி­யி­லான அழுத்­தங்கள் குறைவாக இருப்­ப­தால் தற்­காப்­புத் துறையில் பல புதிய தொழில்­நுட்­பங்கள் உரு­வா­வ­தாக தற்­காப்பு மூத்த துணை அமைச்­சர் ஓங் யி காங் கூறி­யுள்­ளார். இளம் தற்­காப்பு அறி­வி­ய­லா­ளர்­கள் திட்டக் கூட்­டத்­தின் பத்­தா­வது ஆண்டு நிறைவு நிகழ்ச்­சி­யில் சிறப்பு விருந்­தி­ன­ரா­கக் கலந்­து­கொண்ட அமைச்­சர் ஓங், இணையம், 'ஜிபிஎஸ்' போன்ற­வற்றை உதா ­ர­ணங்க­ளா­கக் குறிப்­பிட்­டார். மாண­வர்­கள், பொறி­யி­ய­லா­ளர்­கள், அறி­வி­ய­லா­ளர்­கள் என சுமார் 450 பேர் முன்­னிலை­யில் உரை­யாற்­றிய அவர், "அறி­வி­யல், தொழில்­நுட்­பம் பற்றி அறிந்­து­கொள்ள இது ஏற்ற தருணம். இளம் தற்­காப்­புப் பொறி­யா­ளர்­களை உரு­வாக்­கு­வது முக்­கி­ய­மா­னது," என்றார்.

'டிஎஸ்­டிஏ' எனப்­படும் தற்­காப்பு அறி­வி­யல், தொழில்­நுட்ப முகவை, 'டிஎஸ்ஓ' தேசிய ஆய்­வ­கங்கள் ஆகி­ய­வற்­றின் ஏற்­பாட்­டில் நடத்­தப்­படும் இந்தத் திட்டம் சிங்கப்­பூ­ரில் உள்ள 19 ஒருங்­கிணைந்த பாடத்­திட்­டப் பள்­ளி­களைச் சேர்ந்த சுமார் 400 உள்ளூர் மாண­வர்­களுக்கு தற்­காப்பு அறி­வி­யலை அறி­மு­கப்­ படுத்­தி­யது. தற்­காப்பு அறி­வி­ய­லின் தொடர்­பில் ஆய்வு முகாம்­கள், ஆய்­வுக்­கூ­டப் பாடங்கள், வகுப்­பறைப் பாடங்கள் ஆகி­ய­வற்­றில் பங்­கேற்­ற­து­டன் கணினி நிர­லி­டல், எந்­தி­ர­னி­யல் போன்ற திட்­டப்­ப­ணி­களி­லும் மாண­வர்­கள் ஈடு­பட்­ட­னர். மாண­வர்­களுக்குத் தற்­காப்பு அறி­வி­யல் துறையில் சுமார் 115 விரு­து­களும் உப­கா­ரச் சம்ப­ளங்களும் வழங்கப்­பட்­டன. நீருக்­க­டி­யில் செயல்­படும் எந்­தி­ரன், ஒளியால் வழி­ந­டத்­தப்­படும் எந்­தி­ரன் ஆகியன இவ்­வாண்­டுக்­கான வெற்றி பெற்ற திட்­டப் ­ப­ணி­க­ளாக அறி­விக்­கப்­பட்­டன. இவற்றைத் தற்­காப்­பில் பயன்­படுத்­தினால் நேரம், மனி­த­வ­ளம் சேமிக்­கப்­ப­ட­லாம்.

மாணவர்களுடன் சேர்ந்து சைகைகளைக் கொண்டு இயங்கும் எந்திரனை சோதிக்கும் அமைச்சர் ஓங் யி காங் (இடமிருந்து மூன்றாவது). படம்: டிஎஸ்டிஏ

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!