புதிய பதவிகளை ஏற்கும் லீ ஃபூக் சன், லிம் நியோ சியன்,

உணவு - வேளாண் கால்நடை மருத்துவ ஆணையத்தின் நிர்வாக சபைத் தலைவராக திரு லிம் நியோ சியன் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது அதன் துணைத் தலைவராக இருக்கும் திரு லிம் இன்றிலிருந்து (ஏப்ரல் முதல் தேதி) இரண்டாண்டு காலத் துக்கு தலைவர் பதவியை வகிப்பார். சிங்கப்பூர் பயணத் துறைக் கழகம், எஸ்டி என்ஜினியரிங், ஜேடிசி கார்ப்பரேஷன் போன்றவற்றின் தலைவராகச் செயல்பட்டுள்ள திரு லிம் 1992 முதல் 1995 ராணுவத் தலைவராக இருந்துள்ளார். அசண்டாஸ் ஹாஸ்பிடாலிட்டி டிரஸ்ட் மேனேஜ்மெண்ட் பிரைவேட் லிமெட்டெட்டின் தலைவராகவும் கரையோரப் பூந்தோட்டங்கள் நிறுவனத்தின் துணைத் தலைவராகவும் உள்ள திரு லிம், புதிய பதவியால் தாம் கௌரவிக்கப்படுவதாகக் குறிப்பிட்டார்.

"நமது உணவு வேளாண் கால்நடை பசுமை அமைப்பு புதிய வாய்ப்புகளையும் அதேநேரத்தில் சவால்களையும் எதிர்நோக்கு கிறது. தொழில்நுட்ப மேம்பாடுகளைப் பயன்படுத்தி உணவு விநியோகத்திற்கும் பாதுகாப்புக்கும் புதிய தீர்வுகளைக் கண்டறிய முடியும்," என்று கூறினார் திரு லிம். எஸ்டி என்ஜினியரிங்கின் தலைவரான 59 வயது திரு லீ ஃபூக் சன் இன்று முதல் மூன்றாண்டு காலத்துக்கு கட்டட கட்டுமான ஆணைய நிர்வாக சபைத் தலைவர் பொறுப்பை ஏற்கிறார். 2007ஆம் ஆண்டு முதல் ஆணையத்தின் தலைவராகச் செயல்பட்டு வரும் திரு குவெக் சீ டியட், 61, சபையில் இருந்து ஓய்வு பெறுகிறார் என்று தேசிய வளர்ச்சி அமைச்சின் அறிக்கை தெரிவித்தது. தற்போது அதன் துணைத் தலைவராகச் செயல்படும் திரு லீயின் பதவியை நிர்வாக சபை உறுப்பினர் திரு நோர்மான் ஐபி ஏற்பார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!