மூத்தோருடைய கருத்துகளால் மேம்பாடு கண்ட கேலாங் செராய்

கேலாங் செராய் பகு­தி­யில் புளோக் 22க்கு அருகில் இருக்­கும் மூத்தோர் கூடும் இடத்­தில் 2014ஆம் ஆண்­டி­லி­ருந்து மாதந்­தோ­றும் காலை உணவுக் கூட்­டத்தை நடத்தி மூத்தோர் சிலர் கூடி உரையாடி வந்த­னர். அதன் விளைவாக அப்­ப­கு­தி­யில் வசிப்­போ­ரின் தேவை­களைப் புரிந்­து­கொள்­ள­வும் அதன் அடிப்­படை­யில் அப்­ப­கு­தி­யில் சில மேம்பாடு­களைச் செய்­ய­வும் முடிந்த­த­தாக மரின் பரேட் குழுத்­தொ­கு­தி­யின் அடித்­தள அமைப்­பு­களின் ஆலோ­ச­க­ருமான இணைப் பேரா­சி­ரி­யர் ஃபாத்­திமா லத்­தீ­ஃப் கூறினார்.

பிர­த­மர் அலு­வ­லக அமைச்­சர் சான் சுன் சிங் எதிர்­வ­ரும் ஞாயிற்­றுக்­கிழமை அந்தப் பகு­தியைப் பார்வை­யிட உள்ளார். அந்தப் பகு­தி­யில் நடை­பெ­றும் சமூகப் பணி­களைப் பற்றி நேற்று செய்­தி­யா­ளர்­களி­டம் கூறிய டாக்டர் ஃபாத்­திமா, மூத்­தோ­ருடைய கருத்­து­களின் அடிப்­படை­யில் பல இடங்களில் இருக்கை­கள் அமைக்­கப்­பட்­ட­தா­க­வும் சக்கர நாற்­கா­லி ­களைச் செலுத்­து­வதற்­கான பாதைகள் அமைக்­கப்­பட்­ட­தா­க­வும் சொன்னார். அந்தப் பகு­தி­யில் வசிக்­கும் மூத்­தோ­ரு­டன் உரை­யா­டல்­கள் நடத்­தி­ய­தால் அவர்­கள் எதிர்­நோக்­கும் பிரச்­சினை­கள், அதற்­கேற்ற தீர்வை அமைக்க வேண்டிய சரியான இடங்கள் பற்றி அறிந்­து­கொள்ள முடிந்தது என்றார் அவர்.

மாதாந்திர காலை உணவு உரையாடல் நிகழ்ச்சியில் கேலாங் பகுதியில் வசிக்கும் மூத்தோருடன் கலந் துரையாடியதால் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், அதற்கேற்ற தீர்வை அமைக்க வேண்டிய சரியான இடங்கள் பற்றி அறிந்துகொள்ள முடிந் தது என்றார் மரின் பரேட் குழுத்தொகுதியின் நாளுமன்ற உறுப்பினரான இணைப் பேராசிரியர் ஃபாத்திமா லத்தீஃப் (பச்சைநிறச் சட்டை அணிந்தவர்) அதில் பங்கேற்போருக்காக கடைக்காரர் சங்கத்தின் உறுப் பினர்கள் அடிக்கடி பழங்கள், பானங்களை நன்கொடையாக அளித்தனர். பல்வேறு அமைப் பினரும் அரிசி போன்ற பொருட்களை வழங்கினர். படம்: சாவ் பாவ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!