கடன் தரவரிசையில் பின்னுக்குத் தள்ளப்பட்ட சிங்கப்பூர் வங்கிகள்

சிங்கப்­பூ­ரின் மூன்று பெரிய வங்­கிகளின் கடன் தர­வ­ரிசைக் கணிப்பை நிலைத்­தன்மை­யி­லி­ருந்து எதிர்­மறை­யா­கக் குறைத்­துள்­ளது மூடி'ஸ் இன்­வெஸ்டர்ஸ் சர்வீஸ் நிறு­வ­னம். வங்­கிகளின் சொத்துத் தரம் அவற்­றி­லி­ருந்து கிடைக்­கக்­கூ­டிய லாபம் ஆகியவை குறித்த கவலை­களைக் காரணம் காட்டி இந்தக் கணிப்பு வெளி­யி­டப்­பட்­டுள்­ளது. டிபிஎஸ் வங்கி, அதன் மூலமான டிபிஎஸ் குருப் ஹோல்­டிங்ஸ், ஓசிபிசி, யுஓபி ஆகிய மூன்று வங்­கிகளே மூடி'ஸ் வெளி­யிட்ட கணிப்­பினால் பாதிக்­கப்­ பட்­டவை. சிங்கப்­பூ­ரில் வங்­கிகள் இவ்­ வாண்­டி­லும் அதற்­குப் பிற­கும்­கூட சவாலான சூழலில் செயல்­பட வேண்­டி­யி­ருக்­கும் என அந்­நி­று­வ­னம் குறிப்­பிட்­டது.

உள்­ளூ­ரி­லும் இந்த வட்­டா­ரத்­தி­லும் மெது­வடை­யும் பொரு­ளி­யல், வர்த்­தக வளர்ச்­சி­யால் சிங்கப்­பூ­ரில் வங்­கிகளின் கடன் நிலைகள் தொடர்ந்து வலு­வி­ழக்­க­லாம் எனவும் 'மூடிஸ்' தெரி­வித்­தது. சிங்கப்­பூர் வங்­கிகள் கூடுதல் கடன் பிரச்­சினை­களை எதிர்­நோக்­க­லா­ம் எ­ன­வும் கடன் இழப்பைச் சமா­ளிக்­கும் வழி­வகை­களை அதி­கப்­படுத்த வேண்டும் எனவும் அது குறைந்த அள­வி­லான லாபத்­துக்கு இட்­டுச்­செல்­லும் எனவும் மூடி'ஸ் குறிப்­பிட்­டது.

சிங்கப்­பூர் வங்­கிகள் வலுவான மூல­த­னம், கடன் இழப்பு ஏற்­பாடு­கள், முன்­னே­ற்பாட்டு வரு­மா­னம் ஆகி­ய­வற்றைக் கொண்­டி­ருப்­பதை­யும் 'மூடிஸ்' சுட்­டிக்­காட்­டி­யது. வங்­கிகளின் நிதி, பணப்­பு­ழக்­கம் ஆகியவை வலுவாக இருப்­ப­து­டன் தேவை­யேற்­பட்­டால் அர­சாங்கத்­தின் ஆத­ர­வும் கிடைக்­கும் என்­பதை­யும் அது கோடிட்­டுக் காட்­டி­யது. டிபிஎஸ் வங்கி, ஓசிபிசி, யுஓபி வங்­கிகள் தர வரிசை­யில் இரண் டா­வது இடத்­தி­லும் டிபிஎஸ் குருப் ஹோல்­டிங்க்ஸ் அதற்கு அடுத்த நிலை­யி­லும் மூடி'ஸ் நிறுவனத்தால் வரிசைப்­படுத்­தப்­ பட்­டுள்­ளன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!