ஜனில் புதுச்சேரி: இந்திய சமூகத்தினரின் அக்கறை தேசிய அளவிலானது

வில்சன் சைலஸ்

வேலைநலன் கூடுதல் வருமானத் திட்டத்திற்கான உச்சவரம்பை அதிகரித்தல், வரவு செலவுத் திட் டத்தில் இளையர்களுக்கான பங்கு, மூத்தோர் ஆதரவுத் திட்டத் திற்கான நிதியை அதிகரித்தல் ஆகியவை சிங்கப்பூர் இந்தியர் களின் அக்கறைக்குரிய விவகாரங் களாக திகழ்கின்றன. அண்மையில் வெளியிடப்பட்ட வரவு செலவுத் திட்டம் குறித்து மக்கள் கழக நற்பணிப் பேரவை நேற்று முன்தினம் ஏற்பாடு செய்த கலந்துரையாடலில் முன்வைக்கப் பட்ட கருத்துகள் இவை. பலரிடையே அதிக எதிர் பார்ப்பை ஏற்படுத்திய இவ்வாண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் மூத்தோர் ஆதரவுத் திட்டம், 'கிட்ஸ்டார்ட்' திட்டம் போன்றவை பலரால் வரவேற்கப்பட்டபோதும் திட்டம் குறித்த தங்கள் ஐயங்களைத் தீர்த்துகொள்ள பல்வேறு அமைப்புகளைச் சார்ந்த சுமார் 200 பேர் கலந்துரையாடலுக்கு வந்திருந்தனர். சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழுக்கள், சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம், பஞ்சாபி அமைப்பு, அடித்தளத் தலைவர்கள் ஆகியோர் கல்வி, தகவல் தொடர்பு துணை அமைச்சர் டாக்டர் ஜனில் புதுச்சேரியிடம் தங்கள் கருத்து களையும் கேள்விகளையும் முன் வைத்துப் பயனடைந்தனர்.

வெளிநாட்டுத் திறனாளர்கள் சிங்கப்பூரில் வேலை செய்வதைப் போல திறன் வாய்ந்த உள்ளூர் வாசிகளும் வெளிநாடுகளில் வேலை செய்வதற்கான வாய்ப்புகள் குறித்தும் குடியிருக்கும் வீட்டை அடிப்படையாகக் கொண்டு மூத் தோருக்கான உதவிகள் வழங்கப் படுவது குறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்டன.

கலந்துரையாடலில் பங்கேற்றவர்களுடன் உரையாடும் துணை அமைச்சர் டாக்டர் ஜனில் புதுச்சேரி (வலமிருந்து மூன்றாவது). அவருடன் மக்கள் கழக நற்பணிப் பேரவைத் தலைவர் கே. ராமமூர்த்தி (இடமிருந்து மூன்றாவது). படம்: மக்கள் கழகம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!