13 மணி நேரம் போலிசை அலைக்கழித்தவர் கைது

மத்திய போதைப்­பொ­ருள் ஒழிப்­புப் பிரிவு அதி­கா­ரி­கள் கதவைத் திறக்­கச் சொன்­ன­போது தாயாரை­யும் உள்ளே வைத்து தாமும் உள்­ளி­ருந்து வீட்­டுக்­க­தவைப் பூட்­டிக்­கொண்டார் ஆடவர் ஒருவர். 13 மணி நேரப் போராட்­டத்­துக்­குப் பிறகு நேற்றுக் காலை போலிசார் அந்த ஆடவரைக் கைது செய்­ த­னர். அங் மோ கியோ அவென்யூ 8ல் உள்ள புளோக் 508ல் நடந்த இந்தச் சம்ப­வம் பற்றி நேற்று முன்­தி­னம் இரவு போலி­சா­ருக்கு தெரி­விக்­கப்­பட்­டது. வீட்­டுக்­குள் இருந்த வீ, தாயாரைக் கொல்­வ­து­டன் தம்­முடைய உயிரை­யும் மாய்த்­துக்­கொள்ள இருப்­ப­தாக மிரட்­டல் விடுத்­தார்.

'ஸ்டார்', சிறப்பு கமாண்டோ படை அதி­கா­ரி­களும் பணியில் ஈடு­படுத்­தப்­பட்­ட­னர். நேற்றுக் காலை 10 மணி அளவில் எட்­டா­வது மாடியில் இருந்த அந்த வீட்டுக் கதவை உடைத்து வீட்­டுக்­குள் நுழைந்த­னர் அதி­கா­ரிகள். அந்த வீட்­டி­லி­ருந்து மூன்று கத்­தி­கள் கைப்­பற்­றப்­பட்­டன. அந்த வீட்­டின் மேல் தளம், கீழ்த் தளம் ஆகி­ய­வற்­றில் வசிக்­கும் சில குடி­யி­ருப்­பா­ளர்­களை அதி­கா­ரி­கள் வீடு­களி­லி­ருந்து வெளி­யேற்­றி­னர். அந்த நபர் தமது தாயா­ரு­டன் அதே வீட்டில் எட்டு ஆண்­டு­க­ளாக வசிப்­ப­தாக அண்டை வீட்­டுக்­கா­ர­ரான 70 வயது வீ லாய் ஹுவாட் கூறினார். சென்ற ஆண்டு தாய், மக­னுக்­கிடையே பெரிய சண்டை ஒன்று மூண்ட­தா­க­வும் திரு வீ சொன்னார்.

மாடிப்படி­களில் அமர்ந்து அந்த நபர் தாமாகவே பேசிக்­கொண்­டி­ருப்­பார் எனக் குறிப்­பிட்ட அண்டை வீட்டார், தினமும் அவர் கத்­து­வது கேட்கும் என்ற­னர்.

13 மணி நேரம் போராடிய அதிகாரிகள், பூட்டை உடைத்து வீட்டுக்குள் நுழைந்து, மிரட்டல் விடுத்த நபரைக் கைது செய்தனர். படம்: ‌ஷின் மின்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!