மத்திய கூட்டுறவு நிதிக் குழுவின் புதிய தலைவராக டான் கியன் சியூ

மத்திய கூட்டுறவு நிதிக் குழுவின் புதிய தலைவராக திரு டான் கியன் சியூவை, கலாசார, சமூக, இளையர் துறை அமைச்சர் கிரேஸ் ஃபூ நியமித்துள்ளார். நேற்று முதல் திரு டானின் பதவிக்காலம் தொடங்கியது. குழு வின் தலைவர் என்ற முறையில் திரு டான், கூட்டுறவு இயக்கத்தை பிரபலப்படுத்தும் அதே வேளையில் அத்துறையின் ஆளுமைத் தரத்தையும் நிர்வாகத் திறனையும் உயர்த்தும் பொறுப்புக்குத் தலைமை வகிப்பார். மத்திய கூட்டுறவு நிதிக் குழுவின் தலைவராகக் கடந்த 11 ஆண்டுகள் பணியாற்றிய பிறகு அப்பொறுப்பிலிருந்து விலகுகிறார் திரு எஸ். சந்திரதாஸ்.

சிங்கப்பூரில் செயல்படும் அனைத்து கூட்டுறவுச் சங்கங்கள், கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சின் கீழ் இயங்கும் கூட் டுறவுச் சங்கங்கள் பதிவகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வரும். கூட்டுறவுச் சங்கங்கள் அதன் வருடாந்தர உபரி வருமானத்திலிருந்து ஒரு பகுதியை மத்திய கூட்டுறவு நிதிக் குழுவுக்கு அளிக்கும். அதற்கு இணையாக, கூட்டுறவுத் துறை ஊழியர்களுக்கு அத்துறை சார்ந்த கல்வி, பயிற்சி, ஆய்வு ஆகியவற்றில் திறன்களை வளர்த்துக் கொள்ள இந்த நிதிக் குழு ஆதரவளிக்கும். 2005ஆம் ஆண்டிலிருந்து திரு சந்திரதாஸின் தலைமைத்துவத்தில் செயல்பட்டு வந்துள்ள இக்குழு, கூட்டுறவுச் சங்கங்கள் அதன் ஆற்றல்களை வளர்த்துக் கொள்ள கொள்கைகளையும் திட் டங்களையும் அறிமுகப்படுத்தியது.

"மத்திய கூட்டுறவு நிதிக் குழு வின் தலைவராகச் சேவையாற்ற வாய்ப்பு கிடைத்ததை எனது பெரு மையாகக் கருதுகிறேன். 1960களி லிருந்து கூட்டுறவு இயக்கத்தின் வளர்ச்சியை நான் கண்கூடாகக் பார்த்திருக்கிறேன். கூட்டுறவுச் சங்கங்களின் நிர்வாகம் சிறப்பாக நடைபெறுவதையும் அதன் உறுப்பி னர்களுக்கு சங்கங்கள் பரிவுடனும் கடப்பாட்டுடனும் சேவையாற்று வதையும் நிதிக் குழு உறுதி செய்து வந்துள்ளது மனநிறை வளிக்கிறது," என்றும் திரு சந்திரதாஸ் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!