மிக வறட்சியான மார்ச் மாதம்

சிங்கப்பூரின் வரலாற்றிலேயே ஆக வறட்சியான மார்ச் மாதமாகக் கடந்த மாதம் பதிவானது. இதுவரை பதிவானதிலேயே இரண்டாவது வெப்பமான மாத மாகவும் அது பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது. சென்ற மாதம் பெய்த மழையின் அளவு சாங்கி வானிலை மையத் தில் 6.2 மி.மீ. ஆகப் பதிவாகி யுள்ளது. இது சராசரியை விட 96% குறைவு. சிங்கப்பூரில் மழை யின் அளவைப் பதிவு செய்யத் தொடங்கிய 1869ஆம் ஆண்டு முதல் இந்த அளவு ஆகக் குறைவானதாகும். 1912ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் 18.5 மி.மீ. பதிவே இதுவரை ஆகக் குறைந்ததாக இருந்தது.

சென்ற மாதத்தில் 18 நாட்களுக்கு வெப்பநிலை 34 டிகிரி செல்சியசுக்கும் அதிகமாக இருந் தது. அதில் கடைசி இரு வாரங்களில் அமைந்த வெப்பமான 13 நாட்களும் அடங்கும். கடந்த மாதம் 11 ஆம் தேதி சுவா சூ காங்கில் இவ்வாண்டின் ஆக அதிக வெப்பநிலையாக 35.3 டிகிரி செல்சியஸ் பதிவானது. சென்ற மாதத்தின் சராசரி வெப்ப நிலை 29 டிகிரி செல்சியசாகப் பதிவானது. 1998ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் சராசரி வெப்ப நிலை 29.5 டிகிரி செல்சியசாகப் பதிவானதே ஆக அதிகமானது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!