‘பிரித்தாளும் அரசியலுக்கு சிங்கப்பூர் விதிவிலக்கல்ல’

அமெரிக்காவில் இப்போது இடம் பெற்று வருவதைப் போன்ற பிரிவினைவாத, வெகுஜன அரசியலால் சிங்கப்பூர் பாதிக்கப்படாது என்று சொல்வதற்கில்லை என பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார். அமெரிக்காவும் மற்ற வளர்ந்த நாடுகளும் சந்தித்து வரும் பல்வேறு சவால்களையும் நெருக்கடிகளையும் சிங்கப்பூரும் எதிர்கொண்டுள்ளது என்றும் திரு லீ குறிப்பிட்டார்.

தமது ஒரு வார பணி நிமித்த அமெரிக்கப் பயணம் முடிந்தபின் சிங்கப்பூர் ஊடகத்தினரிடம் பேசிய போது பிரதமர் இவ்வாறு கூறினார். அந்தப் பயணத்தின்போது வா‌ஷிங்டனில் இரு நாட்கள் நடந்த நான்காவது அணுசக்திப் பாதுகாப்பு உச்சநிலை மாநாட்டிலும் அவர் பங்கேற்றார். இப்போதைய முறைகள் தங்களது பிரச்சினைகளைத் தீர்க்கும் என்று அமெரிக்க மக்கள் இனியும் நம்பமாட்டார்கள் என்பதால் அரசியல் அமைப்புக்கு எதிரான எண்ணம் அவர்கள் மத்தியில் தீவிரம் அடைந்துள்ளது என்றும் அவர் சொன்னார்.

"மக்களிடம் நிலவும் தவிப்பும் காலூன்ற முடியவில்லையே எனும் எண்ணமும் கோபமும் இப்போ தைய அரசியல் தலைமைத்துவம் தங்களது உணர்வுகளுக்கு விடைகாணும் என்ற நம்பிக்கை அவர்களிடம் இல்லாததும்தான் இதற்குக் காரணம்," என்று அவர் விளக்கமளித்தார். "அவை உணர்வுபூர்வமானதாக இருக்கலாம். மக்களுடைய இக் கட்டான சூழ்நிலையைத் தீர்க்க உதவ முடியாததாக இருக்கலாம். ஆனால், மக்களுக்கு உண்மை யிலேயே பிரச்சினைகள் இருக்கின் றன. அவற்றைக் கண்டறிந்து தீர்க்க அரசாங்கங்களும் முயன்று வருகின்றன," என்றார் அவர். "அதிகரிக்கும்படியான நெருக் கடிகள் இருக்கின்றன. அது சிங் கப்பூரிலும் நேரலாம். ஏனெனில், ஒரு வளர்ந்த நாடாக, அமெரிக்கா எதிர்கொள்ளும் சவால்களில் சில வற்றை நாமும் எதிர்நோக்கியுள் ளோம்.

நாம் அவற்றுக்கு விடை காண முடியாவிட்டால், நமது அக்கறைகள், எண்ணங்கள் பற்றி பேச வேறு வழியே இல்லை என்று மக்கள் நினைக்கக்கூடும்," என்றும் அவர் சொன்னார். முன்னதாக, 'வால் ஸ்திரீட் ஜர்னல்' நாளிதழுக்கு அளித்த நேர்காணலின்போது அமெரிக்காவில் நிலவும் அரசியல் சூழ்நிலை குறித்து பிரதமர் லீ கவலை தெரிவித்திருந்தார்.

அத்துடன், சிங்கப்பூர் உள் ளிட்ட 12 நாடுகள் கையெழுத்திட்ட தடையற்ற வர்த்தக உடன்பாடான டிரான்ஸ் பசிபிக் பங்காளித் துவத்திற்கு அடுத்த ஜனவரியில் அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்கும் என்ற நம்பிக்கை தமக் கில்லை என்றும் அவர் குறிப் பிட்டார். மேலும், சிங்கப்பூர் எதிர் நோக்கியுள்ள அணுவாயுத பயங் கரவாத மிரட்டல் குறித்தும் நாட் டின் பொருளியல் மறுசீரமைப்பு முயற்சிகள் குறித்தும் அவர் சிங் கப்பூர் ஊடகத்தினரிடம் பேசினார்.

இருப்பினும், புக்கிட் பாத்தோக் இடைத்தேர்தல் எப்போது நடக்கும் என்று கேட்டதற்கு, "நடக்கும்போது உங்களுக்கே தெரியும்," என்று சிரித்தவாறு பதில் கூறினார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!