சாங்கி சீமெய்யில் ‘பிசிஎஃப்’பின் முதலாவது மூத்தோர் பராமரிப்பு நிலையம்

மூத்த குடிமக்களின் வளர்ந்து வரும் தேவையை ஈடு செய்யும் வகையில் மக்கள் செயல் கட்சி சமூக அறநிறுவனம் (பிசிஎஃப்) தனது முதலாவது மூத்தோர் பரா மரிப்பு நிலையத்தைத் திறந்து உள்ளது. அதன் இரண்டாவது நிலையம் இவ்வாண்டு இறுதிக்குள் தயாராகி விடும் என்றும் தெரிவிக்கப்பட் டது. 'ஸ்பார்கல் கேர் @ சாங்கி சீமெய்' என்று அழைக்கப்படும் இந்த முதலாவது நிலையம் நேற்று சீமெய் ஸ்திரீட் 1, புளோக் 120ல் திறக்கப்பட்டது. இயூ டீ வட்டாரத்தில் அமையவி ருக்கும் தனது இரண்டாவது நிலையத்தின் கட்டுமானப் பணி கள் தொடங்கி விட்டன என்றும் 'பிசிஎஃப்' கூறியது.

பல்வேறு பராமரிப்புத் தேவைக ளுடைய மூத்தோருக்கு ஆதரவ ளிக்கும் வகையிலும் பராமரிப்பாளர் களுக்கு உதவி அளிக்கும் வகை யிலும் முதலாவது நிலையம் வடி வமைப்பட்டுள்ளது. இந்த நிலையத்தில் 'டிமென் ‌ஷியா' எனும் ஞாபக மறதி நோய், மூத்தோருக்கான மறுவாழ்வு, கவ னித்துக்கொள்ளும் சேவை தாதிமை பராமரிப்பு ஆகியவையும் அளிக்கப்படும். கடந்த ஆண்டு செப்டம்பரில் செயல்படத் தொடங்கிய சீமெய் நிலையத்தில் தற்போது 70 பேருக்கு ஞாபக மறதி நோய், கவனித்துக்கொள்ளுதல் ஆகிய பராமரிப்புச் சேவையைப் பெற்று வருகிறார்கள்.

சீமெய்யில் பிசிஎஃப் மூத்தோர் பராமரிப்பு நிலையத்தைத் தொடங்கி வைத்து தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங்கும் மூத்த துணை அமைச்சர் ஜோசஃபின் டியோவும் அங்குள்ள முதியவர் ஒருவருடன் உரையாடுகின்றனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!