செஸ்னட் இயற்கைப் பூங்காவில் கூடுதல் வசதிகள்

சிங்கப்பூரின் முதலாவது இயற்கைப் பூங்காவில் காட்டுவழி நடைப்பாதை, சைக்கிளோட்டப் பாதை என இரு வெவ்வெறு பாதைகள் அமைக்கப்பட் டுள்ளன. நேற்றுக் காலை அந்தப் பூங்கா வின் முதலாவது பகுதியைத் திறந்து வைத்தார் தேசிய வளர்ச்சி மூத்த துணை அமைச்சர் டெஸ்மண்ட் லீ. 17 ஹெக்டர் பரப்பளவு கொண்ட அந்தப் பகுதியில் 1.6 கிலோமீட்டர் தொலைவு கொண்ட சைக்கிளோட்டப் பாதையும் 2.1 கிலோமீட்டர் தொலைவு கொண்ட காட்டுவழி நடைப் பாதை யும் உண்டு.

பூங்காவின் வடக்குப் பகுதி இவ் வாண்டு இறுதியில் நிறைவுபெற்ற வுடன் இந்த இரு பாதைகளின் தொலைவும் அதிகரிக்கும். சைக்கிளோட்ட நடவடிக்கையைத் தொடங்கி வைத்த அமைச்சர் லீ, சுமார் 100 குடியிருப்பாளர்களுடன் காட்டுவழி நடைப் பாதையில் நடந்து சென்றார். சிங்கப்பூரில் உள்ள பூங்காக் களைப் பொறுப்புடன் பயன்படுத்தி துடிப்பான நடவடிக்கைகளை மேற் கொள்ளுமாறு அமைச்சர் டெஸ்மண்ட் லீ சிங்கப்பூரர்களைக் கேட்டுக் கொண்டார்.

செஸ்னட் இயற்கைப் பூங்காவில் சைக்கிளோட்ட நடவடிக் கையைத் தொடங்கி வைக்கிறார் தேசிய வளர்ச்சி மூத்த துணை அமைச்சர் டெஸ்மண்ட் லீ (இடமிருந்து 2வது). படம்: சாவ் பாவ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!