மதரஸா மாணவிகள் தாக்கப்பட்ட சம்பவம்: போலிசின் துரித நடவடிக்கை நம்பிக்கை தருகிறது

மூன்று மதரஸா மாண­வி­களைத் தாக்­கி­ய­வரை அடை­யா­ளம் கண்டு கைது செய்­த­தில் போலிசார் சிறந்த முறையில் செயல்­பட்­டுள்­ள­னர் என்று உள்துறை அமைச்­சர் கா.சண்­மு­கம் பாராட்­டி­யுள்­ளார். "இது அனை­வ­ருக்­கும் நம்­பிக்கை­ அ­ளிக்­கிறது," என்று அவர் தமது ஃபேஸ்­புக் பதிவில் தெரி­வித்­துள்­ளார். வெள்­ளிக்­கிழமை காலை 7.20 மணி அளவில் பாயலே­பார் எம்­ஆர்டி நிலை­யத்­துக்கு அருகில் ஆடவர் ஒருவர் 14 முதல் 16 வயது வரை­யுள்ள மூன்று மதரஸா மாண­வி­களைப் பின் தொடர்ந்து தாக்­கி­ய­தா­கக் கூறப்­படு­கிறது. இதன் தொடர்­பில் நேற்­று ­முன்­தி­னம் இரவு 9.50 மணி அளவில் 48 வயது சீன ஆடவரை போலிஸ் கைது செய்­துள்­ள­து.

இந்தத் தாக்­கு­தல் இஸ்­லா­மி­ய­ருக்கு எதிரான மனப்­போக்­கினால் ஏற்­பட்­டதா என்ற கேள்­விக்கு பதி­ல­ளித்த அவர், "இஸ்­லா­மி­ய­ருக்கு எதிரான மனப்­போக்கு பற்றி நான் புதன்­கிழமை அன்று குறிப்­பாக எச்­ச­ரித்­தி­ருந்­தேன். அது சிங்கப்­பூ­ரின் ஆத்மாவை அழிக்­கக்­கூ­டிய புற்­று­நோ­யா­க­லாம். இதை நாம் சகித்­துக்­கொள்ள முடியாது. உள்துறை அமைச்சு அதற்கு எதிராக நட­வ­டிக்கை எடுக்­கும்," என்றார். இது குறித்து புலன்­ வி­சா­ரணை நடை­பெற்று வரு­வ­தா­கத் தெரி­வித்த அமைச்­ச­ர் சண்­மு­கம், "இந்த விவ­கா­ரத்­தில் முழு விவ­ரங்கள், தாக்­கு­த­லுக்­கான நோக்கம் இன்னும் தெரி­ய­வில்லை. எனவே, விசாரணை முடியும்வரை காத்­தி­ருக்க வேண்டும். இதன் பின்­ன­ணி­யில் உள்ள நோக்கம் குறித்து நாம் ஊகங்களுக்கு இடம்­கொ­டுக்­கக்கூடாது," என்றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!