தொகுதிக்கான திட்டங்களைப் பகிர்ந்த முரளிதரன் பிள்ளை

புக்கிட் பாத்தோக் தனித் தொகுதி இடைத்தேர்தலுக்கான மக்கள் செயல் கட்சி வேட்பாளர் திரு முரளிதரன் பிள்ளை அத்தொகு திக்குத் தாம் வகுத்துள்ள திட்டங் களை மேற்கோள்காட்டியுள்ளார். குடியிருப்பாளர்களின், குறிப் பாக முதியவர்கள், வசதி குறைந்த வர்கள் ஆகியோரின் தேவைகளில் கவனம் செலுத்துவதே தமது பிரசார உத்தியாகும் என்று அவர் குறிப்பிட்டார்.

புக்கிட் பாத்தோக் வட்டாரத்தை நேற்று வலம் வந்த திரு முரளி, இல்ல மேம்பாட்டுத் திட்டத்தை அத்தொகுதியில் உள்ள மேலும் பல புளோக்குகளுக்கு விரிவு படுத்தவேண்டும் என்று குடியிருப் பாளர்கள் தம்மிடம் கேட்டுக் கொண்டதாகக் கூறினார். புக்கிட் பாத்தோக் தனித் தொகுதியின் நாடாளுமன்ற உறுப் பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் அத்தொகுதியில் வசிக்கும் குடியிருப்பாளர்களுக்குப் பலன் அளிக்கும் வகையில் தாம் வகுத்திருக்கும் சில திட்டங்கள் பற்றிய தகவல்களைத் திரு முரளி பகிர்ந்துகொண்டார். முதிய குடியிருப்பாளர்களுக் காக அவசரகால பொத்தான்களைப் பொருத்துவதற்கான நிதியை அறிமுகம் செய்வதும் மருத்துவத் தைப் பற்றிய தகவல்களை அவர் களிடம் கொண்டு போய் சேர்ப் பதும் அவற்றில் அடங்கும். இதுவரை இடைத்தேர்தலுக் கான தேதி இன்னும் அறிவிக்கப்பட வில்லை.

தம்மைத் தொடர்பு கொள்ள தேவையான விவரங்களையும் 'என் முழு மனதுடன் உங்களுக்குச் சேவையாற்றுவேன்' என்ற வாசகம் கொண்ட அட்டையையும் குடியிருப்பாளர்களிடம் திரு முரளி (இடது) விநியோகித்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!