அமைதிக்கான செய்தியைப் பரப்பும் இளைய தூதுவர்கள்

இளையர்களின் சக்தியையும் சமூக ஊடகத்தையும் பயன் படுத்தி சக இளையர்களை அணுகி அமைதி, நல்லிணக்க செய்தியைப் பரப்புவது, சிங்கப் பூரில் பல இன, சமய மக்களி டையே, குறிப்பாக இளையர் களிடையே உறவுகளை வலுப் படுத்த ஜாமியா சிங்கப்பூர் அமைப்பின் முயற்சிகளில் இது வும் ஒன்று. "இளையர்களின் புதிய சிந்தனைகள், கருத்துகளிலும் சமூக ஊடகங்களின் பயன் பாட்டின் மூலம் அமைதிக்கான செய்தியை முஸ்லிம்களுக்கும் மற்ற சமயத்தினருக்கும் தெரி விக்க முடியும் என நம்புகிறோம்," என்றார் ஜாமியா சிங்கப்பூரின் முதலாவது துணைத் தலைவர் டாக்டர் எச்.எம். சலீம்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் 20 முஸ்லிம் இளையர்கள் அமைதிக்கான தூதுவர்களாக நியமிக்கப் பட்டதைத் தொடர்ந்து தமிழ் முரசு நாளிதழுக்கு அளித்த பேட்டியில் அவர் இதனைத் தெரிவித்தார். 18க்கும் 35 வயதுக்கு இடைப்பட்ட இந்தத் தூதுவர்கள் பல்வேறு கல்வி, வேலை பின்னணியைச் சேர்ந்தவர்கள். இந்தத் தூதுவர்கள், சக இளையர்கள் பயங்கரவாத வட்டத்தினுள் விழுந்துவிடாமல் அவர்களுக்குக் கைகொடுத்து உதவுவதுடன் உள்ளூர், வட்டார சமூகங்களில் அமைதியை நிலைநாட்ட பொறுப்பு வகிக்கின் றனர். பரபரப்பான வேலை, பள்ளிச் சூழ்நிலைகளுக்கு இடையிலும் தங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள பொறுப்பு களைச் செவ்வனே ஆற்ற விழைவதாகத் தூதுவர்கள் தெரிவித்தனர். இதுவரைக்கும் சமுதாய, கலாசார நல்லிணக்கத் தைப் பேணி வளர்க்க அவர்கள் பல புதிய திட்டங்களை வகுத்து உள்ளனர்.

(இடமிருந்து) முஸ்லிம் இளைய தூதுவர்களான சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக மாணவர் அப்துல் ஹக்கீம், தேசிய சேவையாளர் அமீர் அஸார், வர்த்தகர் நஸாத் ஃபஹீமா, ஜாமியா சிங்கப்பூர் அமைப்பின் பொதுத் தொடர்பு அதிகாரி ஸுரைடா இஸ்மாயில், தூதுவர் குழுவின் ஆலோசகர்கள் ராஜா முஹம்மது, டாக்டர் சலீம், நசீர் கனி. படம்: பெரித்தா ஹரியான்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!