நெஞ்சு வலி எனில் அலட்சியம் வேண்டாம்: பேராசிரியர் அறிவுரை

பேராசிரியர் கிஷோர் மஹ்புபானி, 67, இரட்டை இதய அறுவை சிகிச்சை செய்துகொண்டார். முன்னாள் அரசதந்திரியும் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழ கத்தின் லீ குவான் இயூ பொதுக் கொள்கைப் பள்ளியின் இப்போ தைய தலைவருமான இவருக்கு ரத்தக்குழாய்களில் ஒன்றில் 60% அடைப்பும் மற்றொன்றில் 90%க்கும் அதிக அடைப்பும் இருந்ததாக பல்வேறு சோதனை களுக்குப் பிறகு மருத்துவர்கள் மார்ச் 21ஆம் தேதி தெரிவித்தனர். இவருக்கு மார்ச் 22ஆம் தேதி இரட்டை இதய அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்தது. பேராசிரியர் இப்போது மருத் துவ விடுப்பில் இருக்கிறார்.

பேராசிரியர் மஹ்புபானி மெது ஓட்டத்தில் வழக்கமாக ஈடுபடுவது உண்டு. அப்படி அவர் 8 கிலோ மீட்டர் தொலைவு ஓடியபோது அவருக்கு கடுமையாக இதய வலி ஏற்பட்டது. இந்த ஆண்டில் முன்று தடவை அவருக்கு வலி ஏற்பட்டது. அவரின் குடும்பத்தில் யாருக்கும் இதயப் பிரச்சினை எதுவும் கிடை யாது. ஆனால் வலியை மன உறுதி எப்போதுமே வென்றுவிடும் என்று உறுதியாக இருந்தார். கடைசியாக சோதனைக்குப் போனபோதுதான் அவருக்கு நிலவரம் தெரியவந்தது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!