பட்டிமன்றத் திருக்குறள் விழா

­­­சு­தா­ஸகி ராமன்

தமிழ்மொழிப் பண்­பாட்­டுக் கழகம் ஆண்­டு­தோ­றும் நடத்­தும் திருக்­கு­றள் விழா நேற்று முன்­தி­னம் 30வது ஆண்டாக சிறப்­பாக நடை­பெற்­றது. உமறுப் புலவர் தமிழ் மொழி நிலை­யத்­தில் நடை­பெற்ற நிகழ்ச்­சி­யில் சிறப்பு விருந்­தி­ன­ராக செம்ப­வாங் குழுத் தொகுதி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் திரு விக்ரம் நாயர் பங்­கேற்­றார். தமிழ்மொழியை நாம் இளைய சமு­தா­யத்­தி­ன­ருக்கு எடுத்­துச் செல்லும் முயற்­சி­யில் மேலும் கவனம் செலுத்த வேண்டும் என்று திரு. விக்ரம் நாயர் கூறினார். பள்ளிப் பிள்ளை­களுக்கு அர­சாங்கம் அளிக்­கும் CDA, Ki­d­S­t­a­rt போன்ற உதவித் திட்­டங்களைப் பயன்­படுத்த வேண்டிய அவ­சி­யத்தை­யும் அவர் வலி யு­றுத்­தினார்.

நிகழ்­சி­யில் வர­வேற்­புரை ஆற்றிய கழகத்தின் தலைவர் திரு. ஹரி­கி­ருஷ்­ணன், சிங்கை­யில் அர­சாங்க அறி­விப்­பு­களில் தமிழ்ப் பிழைகள் அடிக்­கடி ஏற்­படு­வதை சுட்­டிக்­ காட்­டினார். 'திரு­வள்­ளு­வ­ரின் கன­வு­கள்=கருத்­து­கள் மனித சமு­தா­யத்­ தில் மெய்ப்­படு­கிறது அல்லது மெய்ப்­ப­ட­வில்லை' என்ற தலைப்­பில் விவாதம் நடை­பெற்­றது. ஆறு உள்ளூர் பேச்­சா­ளர்­கள் நகைச்­சுவை கலந்து வாதங்களை முன்வைத்து, வந்­தி­ருந்த பார்வை­யா­ளர்­களை உற்­சா­கப்­படுத்­தி­னர். இரத்­தின வேங்க­டே­சன், சுப அரு­ணா­ச­லம், மு சேவுகன் ஆகி யோர் தலைப்பை ஒட்டிப் பேசினர்; முனைவர் சரோஜினி செல்­லக்­ கி­ருஷ்­ணன், பிச்­சி­னிக்­காடு இளங்கோ, முனைவர் க இரா­ஜ­கோ­பா­லன் ஆகியோர் தலைப்பை வெட்டிப் பேசினர். மலே­சி­யத் தொலைக்­காட்சி, வானொலி பிர­ப­லம் திரு சி பாண்­டித்­துரை பட்­டி­மன்ற நடு­வ­ராகச் செய­லாற்­றினார்.

நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட செம்பவாங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் விக்ரம் நாயருடன் தமிழ்மொழி பண்பாட்டுக் கழகத் தலைவர் மு. ஹரிகிருஷ்ணன் (இடது). படம்: தியாக ரமேஷ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!