டிசூசா: கருக்கலைப்புக்குப் பதிலாக தத்தெடுக்கலாம்

நமது குடியரசில் தத்தெடுக்கும் கலாசாரத்தைப் பிரபலப்படுத்த வேண்டும். அதுவே சிங்கப்பூரின் குறைவான பிறப்பு விகிதப் பிரச் சினைக்குத் தீர்வு காணும் மாற்று வழியாக மாறக்கூடும் என்று நாடா ளுமன்ற உறுப்பினர் கிறிஸ்டஃபர் டிசூசா தெரிவித்துள்ளார். பட்ஜெட் விவாதத்தில் நேற்று பங்கேற்ற திரு டிசூசா, "அண்மைய ஆண்டுகளில் சிங்கப்பூரின் பிறப்பு விகிதம் சராசரியாக 1.24 பிறப்புகள் என்று இருந்து வந்துள்ளது. அது குறைவான விகிதம்தான். "சிங்கப்பூரின் மக்கள் தொகை மூப்படைந்து வருவதால் குறைவான பிறப்பு விகிதம் நமது எதிர் காலப் பொருளியலைப் பாதிக்கக்கூடும்," என்று விவரித்த திரு டிசூசா, கருக்கலைப்பு பற்றி சிந் திக்கும் தாய்மார்களுக்கு மாற்று யோசனையாகத் தத்தெடுத்தலை அரசாங்கம் பிரபலப்படுத்தலாம் என்று கூறினார்.

"குழந்தைகளைத் தத்தெடுத்து அன்புடனும் அரவணைப்புடனும் பாசத்துடனும் வளர்த்தால் அதுவும் நமது சொந்தக் குழந்தைகளை வளர்ப்பது போலத்தான் என்பதை அரசாங்கம் பிரபலப்படுத்தினால் அது குறைவான குழந்தை பிறப் புக்கு மாற்றுத் தீர்வாக இருக்கும். மேலும் அதுவே சிங்கப்பூரில் கருக்கலைப்பு எண்ணிக்கையைக் குறைக்கக்கூடும்," என்று விளக்கி னார் ஹாலந்து=புக்கிட் தீமா குழுத் தொகுதி எம்.பி. டிசூசா. "கருக்கலைப்பை நாடும் பெண்கள், அவர்களின் குடி யுரிமை, கல்வித் தகுதி, பிள்ளை களின் எண்ணிக்கை எதுவாக இருந்தாலும் அவர்கள் கட்டாய மாக கருக்கலைப்பு தொடர்பான ஆலோசனைக் கூட்டத்துக்குச் செல்ல வேண்டும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!