மகாதேவ்: புத்தாக்கமும் மீள்திறனும் அவசியம்

தமிழவேல்

'ஒப்புரவு ஒழுகு' எனும் ஆத்திசூடி வரியைச் சுட்டி, மாறிவரும் உலகச் சூழலுக்கு ஏற்ப நடக்கவேண்டும் என்று அது உணர்த்தும் கொள்கையை இவ்வாண்டின் வரவு செலவுத் திட்டமும் அதை ஒட்டிய விவாதமும் பின்பற்றவேண்டும் என்றார் நியமன நாடாளுமன்ற உறுப்பினர் இணைப் பேராசிரியர் மகாதேவ் மோகன் (படம்). இவ்வாண்டின் வரவுசெலவுத் திட்டம் பற்றிய விவாதத்தின் இரண்டாம் நாளில் நேற்று தனது முதல் நாடாளுமன்ற உரையைத் தமிழில் தொடங்கினார் சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகத்தின் சட்டத் துறை விரிவுரையாளரான திரு மகாதேவ். அதன்பின் ஆங்கிலத்தில் பேசிய அவர் கல்வி, மீள்திறன், புத்தாக்கம் ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்தினார்.

நிதியமைச்சர் ஹெங் சுவீ கியட் சிக்கனமான வரவுசெலவுத் திட்டத்தை முன்வைத்துள்ளார் என்றும் அது குறுகிய கால, நீண்டகாலப் பொருளியல் சவால்களைச் சமாளிக்க முற்படுகின்றன என்றும் திரு மகாதேவ் சுட்டினார். நிறுவனங்கள் வளங்களை ஒன்று படுத்தி, புத்தாக்கத்தை அரவ ணைத்து, உற்பத்தித்திறனை அதி கரித்து அனைத்துலகமயமாக்க வேண்டும் எனும் அமைச்சர் ஹெங்கின் அறைகூவலை அவர் ஆதரித்தார். "அதிகமாக இணைக்கப்பட்ட, அதிவேகத்தில் மாறிவரும் உலகச் சூழலில் எதிர்பாரா சவால்களைச் சமாளித்து தாக்குப்பிடிப்பது மேலும் முக்கியமாகிறது. தோல்வி களால் துவண்டுவிடாமல் அவற்றி லிருந்து மீண்டு வருவதே மீள் திறன்," என்றார் திரு மகாதேவ். மீள்திறனில் முக்கியத்துவம் கொடுக்கும் வேளையில் நமது இளையர்களை ஆசிய பசிபிக் நாடுகளுக்கு அனுப்பி அனுபவங் களைப் பெற வழிவகை செய்ய வேண்டும் என்றார் அவர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!