தடுப்புகள் நடமாட்டத்திற்கு இடையூறாக இருக்கக்கூடாது

குடியிருப்புப் பேட்டைகளில் உள்ள காலி இடங்கள், நடைபாதைகள் போன்ற பொது இடங்களில் அமைக்கப்படும் தடுப்புகள் முதி யோர், உடற்குறையுள்ளோர் ஆகி யோரின் நடமாட்டத்திற்கு இடை யூறாக இருக்கக்கூடாது என்றும் அவசியம் ஏற்பட்டால் அவற்றை அகற்றவேண்டும் என்றும் தேசிய வளர்ச்சி மூத்த துணை அமைச்சர் டெஸ்மண்ட் லீ கூறியுள்ளார்.

தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினர் டேனியல் கோ எழுப் பிய கேள்விக்குத் திரு லீ இவ்வாறு பதிலளித்தார். பொறுப்பற்ற சைக்கிளோட்டி களைத் தடுக்கவும் அண்மையில் விவாதத்திற்குள்ளான வேறு சில நடவடிக்கைகளைத் தடுக்கவும் சில குடியிருப்புப் பேட்டைகளில் உள்ள பொது இடங்களில் தடுப்பு கள் அமைக்கப்பட்டன.

பொதுக் குடியிருப்புப் பேட்டை களிலுள்ள பொதுச் சொத்துகளை நிர்வகிக்கும் நகர மன்றங்கள் அத்தகைய தடுப்புகளை அமைக் கும்போது தடையில்லா நடமாட் டத்திற்கு இடையூறு இல்லாதபடி கட்டடக் கட்டுப்பாட்டுச் சட்டத் திற்கு இணங்கி நடக்கவேண்டும் என்று அமைச்சர் கூறினார். "தேவையின்றி நடைபாதையை மறைக்கும் வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தால் அவற்றை அகற்றும்படி சம்பந்தப்பட்ட நகர மன்றத்திற்கு கட்டடக் கட்டுப் பாட்டு ஆணையர் உத்தரவிடக் கூடும்," என்றார் அவர். அத்தகைய தடுப்புகள் குறித்து ஏதேனும் புகார் இருந்தால் நகர மன்றங்களை அல்லது கட்டட, கட்டுமான ஆணையத்தைப் பொதுமக்கள் நாடலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த பிப்ரவரியில், குவீன்ஸ் டவுன் மெய் லிங் ஸ்திரீட்டில் இருக்கும் ஒரு குடியிருப்பின் கீழ் உள்ள பொதுவெளியில் மூன்று தடுப்புக்கம்பிகள் அமைக்கப்பட் டன. அந்தப் பொதுவெளியில் காற்பந்து விளையாடுவதாக வந்த புகார்களை அடுத்தே அந்தத் தடுப் புக்கம்பிகள் அமைக்கப்பட்டன என்றும் திருமணம், ஈமச்சடங்கு போன்ற சமுதாய நிகழ்வுகளின் போது அவற்றை அகற்ற முடியும் என்றும் தஞ்சோங் பகார் நகர மன்றம் விளக்கமளித்தது.

குவீன்ஸ்டவுன், மெய் லிங் ஸ்திரீட், புளோக் 143ன் கீழ்த்தளத்தில் உள்ள பொதுவெளியில் 3.5 மீட்டர் நீளம் கொண்ட மூன்று தடுப்புக்கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளன. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!