கேமரா, இஆர்பி தகவல்கள் மூலம் கூடுதல் கண்காணிப்பு

தமிழவேல்

சிங்கப்பூரின் சட்ட அமலாக்க அமைப்புகள் பொதுப் போக்கு வரத்து வீடியோ கேமராக்கள், 'இஆர்பி' எனும் மின்னியல் சாலைக் கட்டணத் திட்டம் ஆகிய வற்றில் கிடைக்கும் தகவல்களைக் கொண்டு சந்தேகத்துக்குரிய நபர் களின் பயண அமைப்பை இனி மேல் கண்காணிக்கத் தொடங் கும். உள்துறை அமைச்சர் கா. சண் முகம் நேற்று நாடாளுமன்றத்தில் நடைபெற்ற தனது அமைச்சின் வரவு செலவுத் திட்ட விவாதத்தின் போது இதனைத் தெரிவித்தார்.

சிங்கப்பூரில் பயங்கரவாதத் தாக்குதல் அபாயம் அண்மைய காலத்தில் ஆக உச்சத்தில் உள் ளதை மீண்டும் வலியுறுத்திய அமைச்சர் சண்முகம் இத்தகைய சூழலில் நம்மிடம் உள்ள எல்லா வளங்களையும் நாம் பயன்படுத்த வேண்டும் என்றார். இதனால்தான் பொதுப் போக் குவரத்து வீடியோ கேமராக்கள், இஆர்பி திட்டம் ஆகியவற்றின் மூலம் கிடைக்கும் தகவல்களைக் கண்காணிப்பு நடவடிக்கைகளுக் காகப் பயன்படுத்தாது என்ற அர சின் முந்தைய நிலையை இப்போது மாற்றவேண்டிய சூழ்நிலை ஏற்பட் டுள்ளது என்றும் அவர் கூறினார். பயங்கரவாதத்தை சிங்கப்பூர் எவ்வாறு கையாளும் என நேற்று நாடாளுமன்றத்தில் பாட்டாளிக் கட்சியின் திரு பிரித்தம் சிங் உட்பட நான்கு உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.

நிலம் சார்ந்த அனைத்து குடிநுழைவுச் சோதனைச் சாவடிகளிலும் உள்ள மோட்டார் சைக்கிள் முகப்புகளில் தானியக்கக் குடிநுழைவு அனுமதி வசதிகளில் பொருத்தப்படும். கோப்புப் படம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!