கலவரம் மீண்டும் நிகழாதிருக்க நடவடிக்கைகள்

லிட்டில் இந்தியா கலவரம் மறுபடியும் நேராமல் பாதுகாப்பதற்கு உள்துறை அமைச்சு தகுந்த நடவடிக்கைகளை அமல்படுத்தியிருப்பதாக மூத்த துணை அமைச்சர் டெஸ்மண்ட் லீ நேற்று கூறினார். உறுப்பினர் டெனிஸ் புவா எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த திரு லீ, உள்துறை அமைச்சு வெளிநாட்டு ஊழியர்கள் அதிக எண்ணிக்கையில் கூடும் லிட்டில் இந்தியா, கோல்டன் மைல் போன்ற இடங்களின் நிர்வாகத்தைத் தொடர்ந்து 'மறுஆய்வு' செய்வதா கக் கூறினார்.

லிட்டில் இந்தியாவில் 2013ஆம் ஆண்டு நடந்த கலவரத்தில் சுமார் 300 இந்திய நாட்டு ஊழியர்கள் ஈடுபட்டனர். ஒரு மரணம் நேர்ந்த விபத்தில் சம்பந்தப்பட்டிருந்த பேருந்தும் அவசர உதவி வாக னங்களும் கலவரத்தின்போது தாக்கப்பட்டன. இச்சம்பவத்தைத் தொடர்ந்து, அப்பகுதியில் போலிஸ் சுற்றுக் காவல் முடுக்கிவிடப்பட்டதோடு, கேலாங்கிலும் லிட்டில் இந்தியா விலும் வாரயிறுதி முழுவதும் பொதுவிடுமுறை நாட்களிலும் மதுபானத் தடையும் விதிக்கப்பட் டது.

அதோடு, தீவு முழுவதும் பொது இடங்களில் இரவு நேரத்தில் மது குடிப்பதற்கும் மதுபானம் விற்பதற்கும் தடை விதிக்கப்பட்டது. ஆனால், மத்திய சிங்கப்பூர் மாவட்ட மேயரான திருவாட்டி புவா, அண்மையில் லிட்டில் இந்தியாவுக்கு வருகையளித்தது பற்றி பேசினார். ‚ "கலவரத்திற்கு முன்பிருந்த கூட்டம் மறுபடியும் லிட்டில் இந்தியாவுக்குத் திரும்பிவிட்டது தெளி வாகத் தெரிந்தது. இதுபோல அதிக எண்ணிக்கையில் மக்கள் ஒன்றுகூடுவது நடமாடும் வெடிகுண்டுகளைப் போன்றது. பொது ஒழுங்கீனச் சம்பவங்கள் நிகழக் காத்திருக்கின்றன. "வரலாறு மறுபடியும் நேராதி ருக்கவேண்டும் என நாம் விரும் பினால் இவ்விவகாரத்திலிருந்து நமது கவனம் திசைதிரும்பாமல் இருப்பது முக்கியம்," என்றார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!