இரட்டிப்பாகும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள்

தமிழவேல்

நம் நாட்டுக்கு எதிராக அதிகரித்து வரும் பயங்கரவாத மிரட்டலைச் சமாளிக்க சிங்கப்பூர் ஆயுதப் படை அதன் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை மேம்படுத்த உள்ளது. குறிப்பாக வீரர்களின் பயிற்சி, செயல்திறன், ஆயுதங்கள் ஆகியவற்றை மேம்படுத்தப்படுவது டன் தற்காப்பில் தொடர்ந்து முத லீடும் செய்யப்படும். மேலும் பொது இடங்களில் ராணுவ வீரர்களின் சுற்றுக்காவல் அதிகரிக்கப்படும். அதிகமான கூட்டம் கூடும் இடங்களில் தாக்குதல் தடுப்பு சுற்றுக்காவல் பணிகளை மேற்கொள்ள அதிக மான ராணுவப் பிரிவுகளுக்குப் பயிற்சி அளிக்கப்படும். தற்போது ஜூரோங் தீவு, சாங்கி விமான நிலையம் போன்ற முக்கியமான இடங்களில் மட்டுமே இதுபோன்ற சிறப்பு சுற்றுக்காவல் பணி நடை பெறுகிறது.

அண்மையில் பாரிஸ், பிரசல்ஸ் நகரங்களில் நடந்த ஒருங்கி ணைந்த பயங்கரவாதத் தாக்குதல் கள் சிங்கப்பூரின் விமான நிலை யம், எம்ஆர்டி, பேரங்காடிகள், நகர மன்றங்கள் போன்ற முக்கிய இடங்களில் நடைபெற்றால் ராணு வத்தால் அதைச் சமாளிக்க முடி யும் என்பதை இந்த புதிய நட வடிக்கை உறுதி செய்யும். நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற தற்காப்பு அமைச்சின் வரவு செலவு விவாதத்தின் போது தற்காப்பு அமைச்சர் டாக்டர் இங் எங் ஹென் இந்த விவரங்களைத் தெரிவித்தார். "ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு தற்போது சிங்கப்பூரின் ஆகப் பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. அவ்வமைப்பு தாக்குதல் நடத்து வதற்கு சிங்கப்பூர் மிகவும் 'வசீகர மான ஓர் இலக்காகவும்' அமை கிறது," என்றார் அமைச்சர் இங்.

சாங்கி விமான நிலைய முனையம் 2ல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள இவர் போன்ற ராணுவ வீரர்கள் விரைவில் பொது இடங்களிலும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!