வீடு, காப்பிக் கடையில் தீ

யூனோஸ் கிரசெண்டில் இருக்கும் வீவக புளோக் ஒன்றின் ஏழாவது மாடி வீட்டில் நேற்றுக் காலை தீ மூண்டது. அந்த புளோக்கின் குடியிருப்பாளர்கள் ஒன்றாகச் சேர்ந்து தீயை அணைத்தனர். யாருக்கும் காயமில்லை. யூனோஸ் கிரசெண்டில் இருக்கும் புளோக் 18ல் தீ மூண்டதாக காலை 8.30 மணிக்குத் தனக்குத் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது. வீட்டிற்கு வெளியே குவிக்கப் பட்டிருந்த பொருட்களில் இருந்து தீ மூண்டிருக்கலாம் என்று தெரி கிறது. தீக்கான காரணம் பற்றி விசாரணை நடக்கிறது என்று இந்தப் படை குறிப்பிட்டது. இதற்கிடையே, ஜூரோங் வெஸ்ட்டில் இருக்கும் ஒரு காப்பிக் கடையில் தீ மூண்டதால் ஏறக் குறைய 30 பேர் அப்புறப்படுத்தப் பட்டனர்.

ஜூரோங் வெஸ்ட் ஸ்தீரிட் 81ல் உள்ள 851ஆவது புளோக்கின் கீழ்ப் பகுதியில் இருக்கும் காப்பிக் கடையில் காலை 10.40 மணிக்கு தீ மூண்டதாகத் தனக்குத் தகவல் கிடைத்தது என்று சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது. உடனே தீயணைப்பு வாகனங்களும் மருத்துவ வண்டியும் அங்கு அனுப்பப்பட்டன. இச்சம்பவத்தில் யாருக்கும் காயமில்லை என்றாலும் சிலர் தங் களுக்கு மூச்சுத் திணறியதாகத் தெரிவித்தனர். அவர்களுக்குத் தற்காப்புப் படையினர் உதவினர். தீ சம்பவத் துக்கான காரணம் பற்றி விசா ரணை நடக்கிறது.

இதற்கிடையே, நேற்று பொங்கோல் சுமாங் வாக்கில் புளோக் 256க்கு அருகே 30 மீட்டர் நீளம் 30 மீட்டர் அகலம் பரப்பளவிலான திறந்தவெளி இடம் ஒன்றில் செடி கொடிகள் தீப்பிடித்து எரிந்ததாக வும் காரணம் பற்றி விசாரணை நடப்பதாகவும் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.

யூனோஸ் கிரசெண்டில் புளோக் 18ல் ஏழாவது மாடி வீட்டில் தீ மூண்டது. குடியிருப்பாளர்கள் தாங்களே ஒன்றுசேர்ந்து வாளிவாளியாகத் தண்ணீரை ஊற்றித் தீயை அணைத்தனர். படம்: வான் பாவ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!