மனச்சுமை மறைத்து மகோன்னத சேவை

வில்சன் சைலஸ்

தமிழகத்தில் பிறந்து வளர்ந்த குமாரி ரேவதி மீனா, 27, இல்லப் பராமரிப்புத் தாதியாகப் பணியாற்ற 2014 ஜனவரியில் சிங்கப்பூர் வந்தார். பணிக்காக இவர் வெளி நாடு வந்தது இதுவே முதன்முறை. புது இடம், புது வேலை, புது மனிதர்கள். ஒருவித படபடப்பு, அச்சம், தயக்கத்துடன் ஒருவழி யாக சாங்கி விமான நிலையத்தில் வந்திறங்கிய குமாரி ரேவதி, ஓரிரு நாட்களுக்குப் பிறகு மவுண்ட் எலிசபெத் மருத்துவமனைக்கு அவசர அவசரமாக அழைத்துச் செல்லப்பட்டார்.

மருத்துவமனையின் பளபளப் பான கட்டடத்திற்குள் நுழைந்த குமாரி ரேவதிக்கு ஒருபக்கம் பிரமிப்பு, மறுபக்கம் அடுத்தது என்ன என்ற ஆர்வம், அச்சம். சிக்கலான ஒரு நோயாளியைத் தாம் பராமரிக்கப் போகிறோம் என்றோ, அவரது உடல்நலன் மேம்படத் தாம் ஒரு முக்கிய காரணமாகத் திகழப் போகிறோம் என்றோ அப்போது அவருக்குத் தெரியாது. தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு வெளியே நிறுத்தப்பட்ட அவருக்கு அப்போதும் ஒன்றும் புரியவில்லை. அங்கே தமக்கு அருகே நின்று கொண்டிருந்த திருமதி லிம்மின் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) வீட்டில் தான் தாம் பணியாற்றப் போகி றோம் என்பதை அறிந்தார் அவர்.

பிறவியிலிருந்தே மூளையில் புற்றுநோய் கட்டிகளால் அவதியுறும் திருமதி லிம்மின் 15 வயது மக ளுக்குத்தான் தீவிரமாக அறுவை சிகிச்சை நடந்துகொண்டிருந்தது என்பதைத் தெரிந்துகொண்ட குமாரி ரேவதி, கண்ணீரும் கம்ப லையுமாக இருந்த அவரிடம் அரைகுறை ஆங்கிலத்தில் திக்கித் திணறிச் சொன்ன முதல் வார்த் தைகள், "கவலைப்படாதீர்கள், உங்கள் மகள் குணமாகிவிடுவார்!". அன்று முதல் இன்று வரை திருமதி லிம்மின் குடும்பத்திற்கு நம்பிக்கைத் தூணாக விளங்கி வருகிறார் குமாரி ரேவதி.

தாம் பராமரிப்புச் சேவை வழங்கி வரும் 15 வயது ஜேனின் குடும்பத்தாருக்கு நம்பிக்கைத் தூணாகத் திகழ்ந்து வருகிறார் தாதி குமாரி ரேவதி மீனா.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!