நன்னெறிகளைக் கைவிடாதீர்: ஹெங்

எதிர்காலத்திற்குத் தோதாக மாறி வரும் சிங்கப்பூர், தனது ஆதார நன்னெறிகளைக் கைவிட்டுவிடக் கூடாது என்று நிதி அமைச்சர் ஹெங் சுவீ கியட் தெரிவித்தார். சிங்கப்பூர் தனக்கு நன்றாகச் சேவையாற்றி இருக்கும் அம்சங்களில் தொடர்ந்து உறுதியாக இருந்து வரவேண்டும் என்று அவர் வெள்ளிக்கிழிமை குறிப் பிட்டார். இந்திய நிர்வாகக் கழகத்தின் முன்னாள் மாணவர்கள் ஏற்பாடு செய்த இரண்டு நாள் உலக மாநாட்டில் அவர் உரையாற்றினார். எதிர்காலத்திற்கு மாறிவரும் சிங்கப்பூர் முக்கியமான மூன்று அம்சங்களை மனதில் கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

சிங்கப்பூரின் நன்னெறிகளைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டும், அவற்றை மேலும் பலப்படுத்த வேண்டும், அதன் நோக்கத்தையும் அதில் மக்களையும் மறு உறுதிப்படுத்த வேண்டும் ஆகியவையே அந்த மூன்று அம்சங்கள். சிங்கப்பூர் முன்னேறி வரும் அதேநேரத்தில் நேர்மை, மீள்திறன், கடும் உழைப்பு நியதி போன்ற நன்னெறிகளை மறந்துவிடக் கூடாது என்று அவர் வலியுறுத்தினார். 2016-04-10 06:00:00 +0800

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!