சுற்றுப்புற பாதுகாப்பு குறித்து இளையர்களுக்குள் கருத்துப் பரிமாற்றம்

இளையர்கள் தங்களுக்குள் சுற்றுப்புற பாதுகாப்பு தொடர்பான யோசனைகளை பரிமாறிக்கொள்வது அவர்கள் உறுதியான நட வடிக்கைகள் எடுக்க வழிவகுக்கும் என்று சுற்றுப்புற, நீர்வள அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி கூறியுள்ளார். 'ஆசியான் பிளஸ் த்ரீ' என்ற ஆசியான் அமைப்புடன் மேலும் மூன்று நாடுகள் கலந்துகொள்ளும் இளையர் சுற்றுப்புற கலந்துரை யாடல் நிகழ்ச்சியில் நேற்று கலந்து கொண்ட அமைச்சர் மேற்கண்டவாறு பேசினார்.

வெள்ளிக்கிழமையிலிருந்து இன்றுவரை நடைபெறும் இந்தக் கலந்துரையாடல் நிகழ்ச்சியை சிங்கப்பூர் முதன் முதலாக ஏற்று நடத்துகிறது. தேசிய சுற்றுப்புற வாரியம் ஆண்டுதோறும் நடத் தும் இளையர் சுற்றுப்புற நாள் இம்மாதம் 22ஆம் தேதி நடை பெறவுள்ளது. அதன் ஒரு அங்கமாக இந்தக் கலந்துரையாடல் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

நேற்றைய கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பேசிய திரு மசகோஸ் ஸுல்கிஃப்லி, அதிக நிலைத்தன் மையுடைய சுற்றுப்புறத்தை இளையர்கள் உருவாக்குவதை உறுதி செய்வது இன்றிமையாதது என்றார். "சுற்றுப்புறத்தைப் பொறுத்த வரை இளையரை ஈடுபடுத்துவது மிகவும் அவசியமான ஒன்று. சொல்லப்போனால் நாம் செய்வ தெல்லாம் உண்மையில் எதிர்காலத்துக்காகத்தான். "சுற்றுப்புற பாதுகாப்பில் நாம் செய்வது அனைத்தும் நிலைத்து நிற்பதை உறுதி செய்ய நாம் அனைவரும், சுற்றுப்புறத்தில் கழிவுப் பொருட்களை போடுவதி லிருந்து தூய்மைக்கேட்டை விளைவிப்பதுவரை, நமது வாழ்க்கை முறையில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டியுள்ளது.

"எனவே, இந்த மாற்றங்களை நாம் இளையர்களிடையே பழக்கப்படுத்துவதுடன் அவர்கள் தாங்களாகவும் குழுக்களாகவும் செய் யக்கூடிய சில காரியங்களை நாம் ஆரம்பித்து வைத்துவிட்டால் அவர்கள் நல்ல வழியில் செயல்படுவதற்கு வழிவகுத்தவர்களா வோம்," என்று கூறினார். இந்தக் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ஆசியான் உறுப்பிய நாடுகளுடன் சீனாவிலிருந்தும் வந்த சுமார் 150 இளையர்கள் சமூகங்களும் நிறுவனங்களும் எவ்வாறு சுற்றுப்புறத்தை பசுமையாக வைத்திருக்க உதவலாம் என்பது குறித்து விவாதித்தனர்.2016-04-10 06:00:00 +0800

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!