சகோதரியின் புகாருக்கு மறுப்புத் தெரிவித்த பிரதமர்

அமரர் லீ குவான் இயூவின் ஆண்டு நிறைவைப் பயன்படுத்தி தாம் ஒரு அரசியல் வம்சத்தை அமைக்க முயல்வதாகத் தம் சகோதரி லீ வெய் லிங் தெரிவித்த புகாரை பிரதமர் லீ சியன் லூங் மறுத்திருக்கிறார். தம் சகோதரியின் குற்றச் சாட்டு தமக்கு ஆழ்ந்த வருத் தத்தைத் தந்துள்ளதாகவும் திரு லீ கூறியுள்ளார். "என் மீதான குற்றச்சாட்டு களில் துளியும் உண்மையில்லை," என்றார் பிரதமர் லீ. முன்னதாக, நேற்று மாலை அவர் வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில், அமரர் லீ நினைவஞ்சலி நிகழ்ச்சிகள் தொடர்பாக அமைச் சரவையுடன் கலந்தாலோசித்த தாகவும் அதைத் தொடர்ந்து அந்த முயற்சிகள் கீழ்மட்டத்தில் இருந்து உருப்பெற வேண்டும் என்றும் அந்தக் குழுக்கள் அமரர் லீ தொடர்பான நிகழ்ச்சிகளை ஒரு வரம்பிற்குள் வைத்துக் கொண்டு எதிர்காலத்தை இலக்காக வைத்து அமைந்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தி யதாகவும் தெரிவித்திருந்தார்.

"அரசியல் வம்சத்தை நான் ஏற்படுத்த விரும்புகிறேன் என்று கூறுவது ஏற்றுக்கொள்ள முடி யாத ஒன்று. சிங்கப்பூரில் தகுதி அடிப்படையே சமூகத்தின் ஆதார நெறியாக விளங்கி வருகிறது. இதில் நானோ, மக்கள் செயல் கட்சியோ, சிங்கப்பூரர்களோ அரசியல் வம்சத்தை ஏற்படுத்தக் கூடிய எந்த முயற்சியையும் சகித்துக்கொள்ள மாட்டார்கள்," என்று திரு லீ கூறினார். முன்னதாக, கடந்த இரு வாரங்களாக தம் ஃபேஸ்புக் பதி வில் பிரதமரின் சகோதரியான டாக்டர் லீ வெய் லிங், அமரர் லீ நினைவஞ்சலி நிகழ்ச்சிகள் தொடர்பாகத் தமது அதிருப்தியை வெளியிட்டிருந்தார். இதன் தொடர்பில் நேற்று பொதுமக்கள் பார்வைக்காக அவர் அனுப்பிய மின்னஞ்சல் செய்தியில், "சியன் லூங் அமரர் லீ குவான் இயூ இறந்த ஓராண்டு நினைவு நிகழ்ச்சியிலேயே சிறிதும் யோசிக்காமல் அதிகார துஷ்பிர யோகம் செய்திருக்கிறார்.

உண்மையில் பார்க்கப்போனால், கடந்த ஆண்டு நடந்த நிகழ்ச்சி அனைவர் மனதிலும் பசுமையாக இருப்பதுடன் எவராலும் ஓராண்டில் மறக்கமுடியாத ஒன்று. ஆனால், அதிகாரத்தில் இருப் போர் அரசியல் வம்சத்தை ஏற்படுத்த விரும்பினால், லீ குவான் இயூவின் மகளாகிய நான் அவருடைய பெயருக்கு நேரிய பாதையில் செல்லாத மகனால் களங்கம் விளைவிக்கப்படுவதை அனுமதிக்கமாட்டேன்," என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன், கொள்கை அடிப்படையிலேயே தாமும் பிரதமர் லீயும் இதில் வேறுபட்டு இருப்பதாக அவர் கூறினார். ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் இணை ஆசிரியர் ஐவன் ஃபெர்னாண் டசுக்கு அனுப்பப்பட்ட தமது இந்த மின்னஞ்சலையும் அதற்கு திரு ஐவனின் பதிலையும் அவர் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றி இருந்தார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!