போலிஸ் துரத்தியது, விபத்தில் எழுவர் காயம்

தப்பி ஓடிய கார் ஓட்டுநரை போலி சார் துரத்தியதில் நேற்றுக் காலை மோசமான விபத்து ஏற்பட்டது. பிடோக் ரிசர்வாயர் ரோடு, யூனுஸ் லிங்க் சந்திப்பில் நிகழ்ந்த விபத்தில் போலி-ஸ் கார் உட்பட இரண்டு டாக்சிகளும் ஒரு காரும் சிக்கியதோடு ஏழு பேர் காயம் அடைந்தனர். விபத்து குறித்து ஊடகங் களுக்கு விளக்கம் அளித்த போலிசார், ஞாயிறு காலை ஸ்டில் ரோடு சவுத் வழியாக போலிசார் நடவடிக்கை மேற்கொண்டதை உறுதி செய்தனர். அதிகாரியின் உத்தரவை மதிக்காமல் சாலைத் தடுப்புகளை மீறி 27 வயது ஓட்டுநர் தப்பிச் சென்றதாக போலிஸ் பேச்சாளர் ஒருவர் கூறினார்.

இந்த துரத்தல் சம்பவத்தில் ஓட்டுநரின் கார், போலிஸ் வாகனம், இரண்டு டாக்சிகள் விபத்தில் சிக்கின. இதில் தப்பி யோடிய கார் ஓட்டுநரும் அவரது பயணியும் மூன்று போக்குவரத்து போலிஸ் அதிகாரிகளும் டாக்சி ஓட்டுநரும் அவரது பயணியும் காயம் அடைந்தனர். சம்பவ இடத்துக்கு ஒரு தீ அணைப்பு வாகனம், ஒரு ரெட் ரினோ, நான்கு ஆம்புலன்ஸ் வாகனங்கள், இரண்டு துணை வாகனங்கள் ஆகியவை அனுப்பி வைக்கப்பட்டதாக சிங்கப்பூர் தற்காப்புப் படையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

சாலையில் விபத்தில் சிக்கிய கார்கள் பல கோணங்களில் இருப்பதை ஃபேஸ்புக்கில் பதிவேற்றப்பட்ட காணொளிப் படம் காட்டியது. படம்: ஃபேஸ்புக்/ஜேசன் கோ

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!