நேர்மை, நாணயத்துக்கு முன்னுரிமை வழங்கிய அதிகாரிகள்

முஹம்மது ஃபைரோஸ்

ஊழலற்ற நாடுகள் பட்டியலில் சிங்கப்பூர் தொடர்ந்து முன்னிலை வகிப்பதற்கு நாட்டின் பொது, தனியார் துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள், தனிநபர்களுக்கு முக்கிய பங்கு உண்டு. அந்த வகையில் 'Certis Cisco' எனும் துணை போலிஸ் படையைச் சேர்ந்த கான்ஸ்டபிள் சுரேந்திரன் ராஜேந்திரன், அம லாக்கப் பிரிவு அதிகாரி ரவீன் சத்யசீலன் ஆகியோரும் பணியில் எப்போதும் நேர்மையையும் நாணயத்தையும் நிலைநாட்டியதற் கான பாராட்டைப் பெற்றனர்.

பணியின்போது லஞ்சப் பணத்தை ஏற்க மறுத்ததற்காக பிரதமர் லீ சியன் லூங்கிடமிருந்து கடந்த வியாழக்கிழமையன்று பாராட்டுக் கேடயத்தைப் பெற்றுக் கொண்டவர்களுள் இவ்விருவரும் அடங்குவர். சிங்கப்பூரில் லஞ்சம் வழங்கும் சம்பவங்கள் மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிகக்குறைவு என் றாலும் பணிச்சூழலின்போது அத் தகைய ஒருசில சம்பவங்களைத் திறம்பட சமாளிக்க வேண்டியுள்ளதாக தமிழ் முரசிடம் தெரிவித்தார் திரு சுரேந்திரன், 30.

லஞ்ச ஊழலை ஏற்க மறுத்து நேர்மையுடன் நடந்துகொண்டதற்காக பிரதமர் லீ சியன் லூங்கிடமிருந்து பாராட்டுக் கேடயத்தைப் பெற்ற சுரேந்திரன் (இடது), ரவீன். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!