‘சரியான மொழிபெயர்ப்பே கடப்பாடு’

தமிழவேல்

தமிழ் மொழிபெயர்ப்பின் தரத்தை மேம்படுத்தி தவறுகளைத் தவிர்க்க மொழிபெயர்ப்பு குறித்த செயல்முறைகளை அரசு மறு ஆய்வு செய்யவுள்ளது. தொடர்பு தகவல் துணை அமைச்சர் சீ ஹொங் டாட் நேற்று நாடாளுமன்றத்தில் நடந்த தொடர்பு தகவல் அமைச் சின் நிதி ஒதுக்கீட்டு விவாதத் தின் போது இதனைத் தெரிவித் தார். அண்மைய மாதங்களில் அரசு தொடர்பான தகவல் சாத னங்களில் பல தவறான மொழி பெயர்ப்புகள் உருவெடுத்து உள் ளன என்பது தனது அமைச்சின் கவனத்துக்கு வந்துள்ளது என் றும் இது குறித்து அண்மையில் நடந்த தேசிய மொழிபெயர்ப்புக் குழு சந்திப்பில் பேசப்பட்டது என்றும் அமைச்சர் சீ கூறினார்.

இந்தத் தவறுகள் தவிர்க்கப் படக்கூடியவை என்றும் அவை முதலில் நடந்தே இருந்திருக்கக் கூடாது என்றும் அவர் குறிப் பிட்டார். தமிழ் மொழிபெயர்ப்பு களில் அண்மைய காலமாக தவறுகள் அதிகரித்துள்ளது குறித்தும் மொழிபெயர்ப்பின் தரத்தை உயர்த்த அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்றும் செம்பவாங் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப் பினர் திரு விக்ரம் நாயர் நேற்று எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் சீ பதிலளித்தார்.

"தமிழ் மொழிபெயர்ப்புகள் சரியாகச் செய்யப்படுவது முக் கியம் என்று நான் அனைத்து அரசு அமைப்புகளுக்கும் நினைவுபடுத்தியுள்ளேன். அரசு தகவல்களில் மொழிபெயர்ப்பு தவறுகளைக் குறைக்க நம்மால் முடிந்தவற்றைச் செய்யவேண்டும்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!