லாரன்ஸ் வோங்: நிலையாக ஒரு வீடு இருக்க வேண்டும்

பொது வாடகை வீட்டுத் திட்டத்தில் இருந்து மீண்டும் வீவகவிடமிருந்து சொந்த ஈரறை வீவக வீடு வாங்க உதவி பெறும் குடும்பங்கள் அந்த வீட்டில் குறைந்தது 20 ஆண்டுகள் வசித்த பின்னரே அதை விற்க முடியும். ஏற்கெனவே இரு முறை வீட மைப்பு வளர்ச்சிக் கழகத்தின் வீட்டுக்கடன் பெற்ற இத்தகைய குடும்பங்கள் தங்கள் வீட்டுச் சாவியைப் பெற்றவுடன் தொடர்ந்து ஐந்து ஆண்டுகளுக்கு தனிப்பட்ட உதவிகளைப் பெறுவார்கள்.

இத்தகைய குடும்பங்களின் பிள்ளைகளுக்கு நிலையான ஒரு வீடு இருக்க வேண்டும் என்பதே இதன் நோக்கம் என்று தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். தனது அமைச்சின் வரவு செலவு திட்ட விவாதத்தின்போது புதிய தொடக்கத் திட்டத்தின் விவரங்களை அவர் வெளியிட்டார். கடந்த ஆண்டு பிரதமர் லீ சியன் லூங் இந்தத் திட்டத்தை அறிவித்தார். இளம் பிள்ளைகளுடைய வாடகை வீடுகளில் வசிக்கும் வசதி குறைந்த குடும்பங்கள் தங் கள் சொந்த ஈரறை வீடுகளை வாங்க உதவி புரியும் இந்தத் திட்டம் இவ்வாண்டு இறுதியில் அமலாக்கப்படும்.

இந்தத் திட்டத்தின் கீழ் பெரும் எண்ணிக்கையிலான குடும்பங்கள் பயனடையாது. ஆனால் இத்திட்டம் சென்றடையும் குடும்பங்களுக்கு அர்த்தமுள்ள தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அமைச்சர் வோங் குறிப்பிட்டார். வீட்டு விலைகள் கட்டுப் படியாகும் ஒன்றாக அமைவதற்கு ஈரறை 'ஃப்ளெக்ஸி' வீடுகளுக்கு மட்டுமே இத்திட்டம் பொருந்தும்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!