கைவிடப்பட்ட தள்ளுவண்டிகளைக் கண்டுபிடிக்க புதிய செயலி

நகராட்சிச் சேவைகள் அலுவலகத்தை (எம்எஸ்ஓ) அடைய பொதுமக்கள் விரைவில் புதிய கைபேசிச் செயலி ஒன்றையும் இணையப்பக்கம் ஒன்றையும் பயன்படுத்தலாம் என்று நகராட்சிச் சேவைகள் அலுவலத்துக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் கிரேஸ் ஃபூ தெரிவித்துள்ளார். தேசிய வளர்ச்சி அமைச்சின் கீழ் வரும் நகராட்சிச் சேவை அலுவலக விவகாரம் தொடர்பில் பேசிய அமைச்சர் ஃபூ, 'எம்எஸ்ஓ' வின் கைத்தொலைபேசிச் செயலி பொதுமக்கள் கூறும் நகராட்சிச் சேவைகள் தொடர்பான கருத்துக ளைச் சேகரித்து, அதைச் சம்பந்தப் பட்ட அரசாங்க அமைப்புகளிடம் அனுப்பி வைக்கும் என்றார். இந்தச் செயலி இம்மாத இறுதி யில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள 'கைவிடப்பட்ட தள்ளுவண்டி களைக் கண்டுபிடியுங்கள்' திட்டத் திற்கு முதன் முதலில் பயன்படுத் தப்படும்.

அந்த வகையில் 'எம்எஸ்ஓ' சிங்கப்பூரின் ஐந்து பெரிய பேரங்காடி நிறுவனங்களான 'கோல்ட் ஸ்டோரெஜ்', 'ஜயண்ட்', முஸ் தஃபா கடைத் தொகுதி, என்டியுசி ஃபேர்பிரைஸ், 'ஷெங் சியோங்' ஆகியவற்றுடன் இணைந்து பணி யாற்றி, அந்த நிறுவனங்களின் கைவிடப்பட்ட தள்ளுவண்டி களைக் கண்டுபிடிக்க உதவும். "பேரங்காடி தள்ளுவண்டிகள் வெற்றுத்தளங்கள், நடைபாதை கள் போன்ற இடங்களில் இடைஞ்சலாகக் கிடப்பதையும் அவை குப்பைத் தொட்டிகளாகப் பயன்படுத்தப்படுவதையும் நாம் பார்த்திருக்கிறோம். "ஆக, அடுத்த முறை நீங்கள் கைவிடப்பட்ட தள்ளுவண்டிக ளைக் கண்டால், உடனே எம்எஸ்ஓ கைத்தொலைபேசி செயலி மூலம் அது இருக்கும் இடத்தைத் தெரி யப்படுத்தலாம். அந்தத் தகவல் சம்பந்தப்பட்ட பேரங்காடிக்குத் தெரிவிக்கப்பட்டதும் அதன் ஊழி யர்கள் அதைத் திரும்ப கொண்டு வருவார்கள்," என்று விவரித்தார் திருவாட்டி ஃபூ.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!